புதுடெல்லி: தினசரி உலகளாவிய COVID-19 நோய்த்தொற்றுகள் பிப்ரவரி மாதத்திற்குள் சுமார் 18.7 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் கோவிட் நான்காம் அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். ஒமிக்ரானின் புதிய மாறுபாடு XBB இந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கை மெதுவாக 16.7 மில்லியன் என்ற அளவில் உயரலாம் என்று வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2022 ஜனவரியில் கடந்த குளிர்காலத்தில் மிகவும் அதிகமாக கோவிட் தினசரி பாதிப்பு இருந்தது. தற்போது, புதிய ஒமிக்ரானின் புதிய மாறுபாடு, குளிர்காலத்தில் கோவிட் நோய் ஏற்படுவதை துரிதப்படுத்தும் என்றாலும், இறப்புகள் எண்ணிக்கையில் அதிகரிப்பை ஏற்படுத்தாது என்று வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) தெரிவித்துள்ளது.


உலகளாவிய தினசரி இறப்புகள் பிப்ரவரி 1 அன்று சராசரியாக 2,748 பேராக இருக்கும் என்று அது கணித்துள்ளது, தற்போது கோவிட் இறப்பு எண்ணிக்கை தினசரி 1,660 பேர் என்ற அளவில் உள்ளது. 


மேலும் படிக்க | BA 5 வகை ஒமிக்ரானின் புதிய அறிகுறிகள்! உங்களுக்கு இப்படி இருந்தா கவனமா இருங்க


IHME மதிப்பிட்டுள்ளபடி, அமெரிக்காவில் தினசரி நோய்த்தொற்றுகள் மூன்றில் ஒரு பங்கு முதல் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கும், இது பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் குளிர் காலநிலை தொடர்பான உட்புறக் கூட்டங்களால் உந்தப்படுகிறது.


ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்கனவே உச்சத்தை அடைந்துள்ளது என அக்டோபர் 24ம் தேதி வெளியிடப்பட்ட வாஷிங்டன் பல்கலைக்கழக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்திற்குள், சுமார் 190,000 ஆக இருக்கும் நோயாளிகள் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் குறையும் என்று IHME எதிர்பார்க்கிறது.


ஜெர்மனியில் சமீபத்திய கோவிட் பரவல் ஆனது Omicron துணை வகைகளான BQ.1 அல்லது BQ.1.1 காரணமாக இருக்கலாம் என்றும், அது வரவிருக்கும் வாரங்களில் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.


மேலும் படிக்க | குழந்தை திருமணத்திற்கு ஆதரவு... தீட்சிதர்கள் அதிரடி கைது


ஜெர்மனியில் மருத்துவமனையில் 2020 இல் COVID ஏற்பட்டப் பிறகு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கைக்கு பிறகு தற்போது எண்ணிக்கை மிக உயர்ந்திருப்பது கவலையளிப்பதாக கூறப்படுகிறது. 


IHME இன் பகுப்பாய்வில் புதிய Omicron துணை வகை XBB ஏற்படுத்தும் பாதிப்பால், தற்போது சிங்கப்பூரில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இந்த நோய் மேலும் விரைவில் பரவினாலும் தீவிரம் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.


Omicron இன் BA.5 துணை மாறுபாட்டால் முன்னர் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பதால், XBB இன் உலகளாவிய தாக்கம் முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வாஷிங்டன் பல்கலைக்கழக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Covid 4th Wave: விரைவில் ரிலீஸாகிறதா கோவிட் புது அலை? எச்சரிக்கை விடும் WHO


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ