நீங்கள் டீ பிரியராக இருந்து நாள் முழுவதும் நிறைய டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் கவனமாக இருங்கள். ஏனெனில் இந்த பழக்கம்  உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும். பலருக்கு, தேநீர் வாழ்க்கையின் உயிர்நாடியாகவே உள்ளது. சிலருக்கு டீ குடிக்காவிட்டால் தலைவலி அதிகமாகும். ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ குடிக்கலாம் என்பது குறித்த நிபுணர்கள் கருத்தை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு நாளைக்கு எத்தனை கப் தேநீர் குடிக்க வேண்டும்


ஒரு நாளைக்கு 3-4 கப் தேநீர் குடித்தால் பரவாயில்லை, ஆனால் நீங்கள் இதை விட அதிகமாக குடித்தால், உங்கள் உடல நலன் பாதிக்கப்படலாம். ஏனெனில் இது வயிற்று பிரச்சனைகளையும் அதிகரிக்கிறது. மறுபுறம், நீங்கள் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, தேநீர் குடிக்க வேண்டும்.


மேலும் படிக்க | Cancer: புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!


நெஞ்செரிச்சல் மற்றும் தலைச்சுற்றல் பிரச்சனை அதிகரிக்கும்


அதிகமாக தேநீர் குடிப்பது உங்கள் நெஞ்செரிச்சல் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கும். இதுதவிர அதிக டீ குடிப்பதாலும் தலைசுற்றல் ஏற்படுகிறது. மேலும் தேநீர் அருந்துவதால் உடலில் நீர்ச்சத்து குறையும் என்று நம்பப்படுகிறது. முடிந்தால், நாள் முழுவதும் தேநீரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உட்கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!


அதிகமாக டீ குடிப்பதால் எலும்புகள் வலுவிழந்துவிடும்


இது தவிர அதிக டீ குடிப்பதால், நீண்ட நேரம் டீ சாப்பிடுவதால் எலும்புகள் வலுவிழந்துவிடும். தேநீரில் காணப்படும் டானின்கள், ஃபோலிக் அமிலத்தை உறிஞ்சுவதை பாதிக்கிறது, எனவே எலும்புகள் பலவீனமடையும் வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)


மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR