டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கொரோனா தொற்றால் பாதிப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சேதனை முடிவு புதன்கிழமை (ஜூன் 17) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயர் தர காய்ச்சல் காரணமாக செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செவ்வாய்க்கிழமை காலை கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு நலன் கருதி அவருக்கு மீண்டும் புதனன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


ஆம்புலன்ஸ் தயாரிப்பு துறையிலும் காலடி பதித்தது மஹிந்திரா குழுமம்!...


அதிக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக ஜெயின் தற்போது ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த ஜூன் 15 இரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


முந்தைய நாள், ஆம் ஆத்மி கட்சி (AAP) MLA அதிஷியும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார் என தகவல்கள் வெளியானது. டெல்லியின் கல்காஜியைச் சேர்ந்த ஆம் ஆத்மி MLA தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு நெறிமுறையைப் பின்பற்றி வருகிறார்.


இதுவரை இல்லாத அளவிற்கு 2174 தொற்றுகளை பதிவு செய்தது தமிழகம்!...


கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள MLA விரைவில் குணமடைய வேண்டும் என டெல்லி முதல்வர் விருப்பம் தெரிவித்தார். இதுதொடர்பான அறிவிப்பில் அவர், "கொரோனா கே கிலாஃப் லடாய் மே அதிஷி ஜி கா மகாத்வபூர்ணா யோக்தான் ரஹா ஹை. (கொரோனாவுக்கு எதிராக. அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் மக்களுக்கு சேவை செய்வார் என்று நம்புகிறேன்.)" என குறிப்பிட்டிருந்தார்.


படேல் நகரைச் சேர்ந்த மேலும் ஒரு ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆனந்த் அவர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கிறது.