இதுவரை இல்லாத அளவிற்கு 2174 தொற்றுகளை பதிவு செய்தது தமிழகம்!

புதன்கிழமை தமிழகம் COVID-19 நோயாளிகளின் கூர்மையான உயர்வைக் கண்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 2,174 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 50,193-ஆக அதிகரித்துள்ளது.

Last Updated : Jun 17, 2020, 06:49 PM IST
  • பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து 842 நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர், இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 27,624 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
  • தமிழ்நாட்டில் தற்போது மொத்தமாக 21,990 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தமிழக சுகாதாரத்துறையில் மருத்துவ புல்லட்டின் குறிப்பிடுகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு 2174 தொற்றுகளை பதிவு செய்தது தமிழகம்! title=

புதன்கிழமை தமிழகம் COVID-19 நோயாளிகளின் கூர்மையான உயர்வைக் கண்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 2,174 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 50,193-ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி எம்.எல்.ஏ அதிஷிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு....

இன்று பதிவான தொற்றுகளில் அதிகப்படியாக சென்னை 1,276 கொரோனா தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இதயடுத்து சென்னையின் மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 35,556-ஆக உயர்ந்துள்ளது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு (3,271), திருவள்ளூர் (2,037), காஞ்சீபுரம் (864), திருவண்ணாமலை (816) மற்றும் கடலூர் (645) தொற்றுகளையும் பதிவு செய்துள்ளது.

இறப்புகளை பொறுத்தவரையில் புதன் அன்று மட்டும் 48 நோயாளிகள் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர் என தமிழக அரசின் சுகாதாரத்துறை புல்லட்டின் தெரிவிக்கிறது. இதனால் மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை 576-ஆக உயர்வு கண்டுள்ளது.

அதேவேளையில் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து 842 நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர், இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 27,624 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் தற்போது மொத்தமாக 21,990 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தமிழக சுகாதாரத்துறையில் மருத்துவ புல்லட்டின் குறிப்பிடுகிறது.

ஆம்புலன்ஸ் தயாரிப்பு துறையிலும் காலடி பதித்தது மஹிந்திரா குழுமம்!...

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மொத்தம் 25,463 மாதிரிகளை சோதித்துள்ளது. இந்த எண்ணிக்கை மாநிலத்தில் சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கையினை 7.73 லட்சமாக உயர்த்தியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு பாதிப்புள்ளன 0-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,533-ஆக உயர்ந்துள்ளது.

Trending News