Pubg Addict Son Killed Parent: பப்ஜி விளையாட்டு அடிமையான மகன் தனது பெற்றோரை கொடூரமாக தாக்கி, அவர்களை கொலை செய்த ஒரு பயங்கரமான சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தின் ஜான்சி நகரையே உலுக்கியுள்ளது. பால் வியாபாரி சம்பவ நடந்த வீட்டிற்கு வந்து பார்த்தபோது இந்த பயங்கரமான காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்கால இளைஞர்களிடையே பிரபலமான விளையாட்டான பப்ஜி மீதான ஆவேசம் அந்த இளைஞரின் மன சமநிலையை கணிசமாக பாதித்ததாக கூறப்படுகிறது. ஜான்சியின் நவாபாத் பகுதியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. லட்சுமி பிரசாத் (60), விமலா (55) என்ற வயதான தம்பதி அங்கித் (28) என்ற மகனுடன் வசித்து வந்தனர். நேற்று (ஆக. 5) காலை வழக்கம்போல் பால் வியாபாரி கதவைத் தட்டியும், வீட்டில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. பீதியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, லட்சுமி பிரசாத் மற்றும் விமலாவின் உயிரற்ற உடல்கள் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கித் நேற்று முன்தினம் இரவு அவர்களை தாக்கியுள்ளார். 


ஆன்லைன் கேம் பப்ஜிக்கு அதிக அடிமையானதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கித்தின் மன சமநிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இரவும் பகலும், அவனது ஒரே கவனம் பப்ஜி விளையாடுவதிலேயே இருந்துள்ளது, அது அவனது மன நலனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவனை மிகவும் அழுத்தத்திற்குள் தள்ளியுள்ளது. 


மேலும் படிக்க | ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்றம் செல்வது எப்போது... மக்களவை செயலகம் கூறுவது என்ன..!


போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், லட்சுமி பிரசாத் மற்றும் விமலா இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, லட்சுமி பிரசாத் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டது. அவரது மனைவி விமலா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் உடல்களை பிரேத பரிசோதனை செய்து, அங்கித்தை கைது செய்தனர்.


விசாரணையில், அங்கித் தனது பெற்றோரை லத்தி போன்ற மரத்தாலான கம்பை வைத்து கொடூரமாக தாக்கியதை காவல்துறையிடம் ஒப்புக்கொண்டார். அளவுக்கு அதிகமாக அடித்ததில் தந்தை, தாயார் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகாரிகள் அங்கித்தின் மன சமநிலையின்மை மற்றும் அவரது பப்ஜி அடிமைத்தனம் ஆகியவை அவரை நீண்ட காலமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தே இந்த கொடூர சம்பவத்திற்கும், பெற்றோரின் மரணத்திற்கு காரணம் என்று கூறுகின்றனர்.


இது குறித்து ஜான்சி எஸ்எஸ்பி ராஜேஷ் கூறுகையில், "போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கித்தின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம், அதிகப்படியான கேமிங்கின் கடுமையான விளைவுகள் மற்றும் அது மனநலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது" என்றார். 


ஜான்சியில் நடந்த திகிலூட்டும் சம்பவம், அதிகப்படியான கேமிங்கின் அபாயகரமான விளைவுகள் மற்றும் மனநலத்தில் அதன் தாக்கம் ஆகியவற்றை நினைவூட்டுகிறது. இந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இந்த வழக்கை ஆழமாக விசாரிக்க அதிகாரிகளைத் தூண்டியது. விசாரணை விரிவடையும் போது, கேமிங் போதையின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசரத் தேவையை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. மெய்நிகர் மற்றும் நிஜ வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு இடையில் ஆரோக்கியமான சமநிலையைப் பேணுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.


மேலும் படிக்க | பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் இதுவரை நடக்காத வரலாற்று நிகழ்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ