சீமா ஹைதர் விவகாரம்... எல்லை தாண்டிய காதல் குறித்து முதல்வர் யோகி கூறியது என்ன..!

'எல்லை தாண்டிய காதல் வழக்கு' என்று அழைக்கப்படும் சீமா ஹைதர் விவகாரம் தொடர்பாக, முதல் முறையாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 2, 2023, 09:11 AM IST
  • நான் இப்போது இந்தியாவின் மருமகள்: சீமா ஹைதர்
  • SSB, UP காவல்துறையிடம் இருந்து மேலும் தகவலைக் கோரும் விசாரணை அமைப்புகள்.
  • பாகிஸ்தானுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை: சீமா ஹைதர்
சீமா ஹைதர் விவகாரம்... எல்லை தாண்டிய காதல் குறித்து முதல்வர் யோகி கூறியது என்ன..! title=

PUBG ஆன்லைன் மொபைல் கேம் விளையாடும் போது துளித்த காதலால், உத்திர பிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் சச்சின் மீனாவுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் தான் தற்போது பேசு பொருளாக உள்ளார். 'எல்லை தாண்டிய காதல் வழக்கு' என்று அழைக்கப்படுவது தொடர்பாக, முதல் முறையாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய முதல்வர் யோகி, சீமா ஹைதர் வழக்கு தொடர்பான  ஊகங்களுக்கு பதிலளித்த முதல்வர் யோகி, “இது நாடுகளுடன் தொடர்புடைய விஷயம். இது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்” என்றார்.

சீமா ஹைதர் - சச்சின் மீனா காதல் கதை

நேபாளத்தில் தான் திருமணம் செய்து கொண்ட தனது இந்திய துணையை 2020 ஆம் ஆண்டு ஆன்லைன் மொபைல் கேம் PUBG விளையாடும் போது  காதல் துளித்ததாக சீமா ஹைதர் கூறுகிறார். PUBG மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களின் மூலம் அவர்களுக்கிடையேயான நட்பு எல்லைகளை கடக்கும் அளவிற்கு காதலாக மலர்ந்தது. காத்மாண்டுவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் சச்சின் மீனாவுடன் ஒரு வாரம் கழிக்க தனது நான்கு குழந்தைகளுடன் இந்த ஆண்டு மார்ச் மாதம் நேபாளத்திற்குச் சென்றார்.

ட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த சீமா ஹைதர்

பின்னர், இந்த ஆண்டு மே மாதம், அவர் கராச்சியில் இருந்து துபாய் மற்றும் நேபாளத்திற்குச் சென்று சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார். சீமா ஹைதர் மற்றும் சச்சின் மீனா ஜூலை 4 அன்று இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியதற்காக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் மற்றும் மூன்று நாட்களுக்குப் பிறகு உள்ளூர் நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போதிருந்து, பாகிஸ்தானில் இருந்து வந்த இவர் ஊடகத் தலைப்புச் செய்திகளைப் பிடித்து வருகிறார், மேலும் 'பாகிஸ்தானின் உளவாளி' என்ற கூற்றுக்களை நிராகரித்து தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு ஏராளமான பேட்டிகளை அளித்துள்ளார்.

பாகிஸ்தானுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை: சீமா ஹைதர்
 
ஜீ மீடியாவிடம் பிரத்தியேகமாக பேசிய சீமா ஹைதர், தான் ஒரு சாதாரண பெண் என்றும் பயங்கரவாதி அல்ல என்றும், இந்தியாவில் என்றென்றும் வாழ விரும்புவதாகவும் கூறினார். இவை அனைத்திற்கும் மத்தியில், மார்ச் மாதம் இருவரும் தங்கியிருந்த நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள ஒரு ஹோட்டலின் உரிமையாளர், இந்த காதல் ஜோடி போலி பெயர்களில் ஒரு அறையை பதிவு செய்ததாகக் கூறினார். சீமா ஹைதரைச் சுற்றியுள்ள மர்மம், அவரது 'மர்மமான' பயணம் குறித்து உத்திர பிரதேச பயங்கரவாத தடுப்பு அமைப்பு மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளால் வெளியிடப்பட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து நொய்டாவைச் சேர்ந்த இந்திய கூட்டாளி சச்சின் மீனாவுடன் தங்கியதற்காக விசாரணைக்கு உட்பட்ட சீமா ஹைதர், இந்திய குடியுரிமை கோரி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு தாக்கல் செய்தார். ஊடக அறிக்கைகளின்படி, குடியரசுத்தலைவர் முர்முவிடம் தனது கருணை மனுவில், இந்திய குடிமகன் சச்சின் மீனாவை திருமணம் செய்து கொண்டதன் அடிப்படையில் தனக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று சீமா ஹைதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க | சீமா ஹைதர் விவகாரம்... பாகிஸ்தான் இந்துக்களுக்கு அதிகரிக்கும் சிக்கல்கள்!

நான் இப்போது இந்தியாவின் மருமகள்: சீமா ஹைதர்

தற்போது தான் இந்தியாவின் மருமகள் என்று கூறி, சீமா ஹைதர் இந்தியாவில் தங்க அரசிடம் அனுமதி கோரியுள்ளார். அவர் தனது மனுவில், இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகள் தன்னிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார். அவர் இந்து மதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டதாகவும், இந்திய கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைக் கற்றுக்கொள்ள தன்னால் முடிந்தவரை முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். அவர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடனான தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வரும் நேரத்தில் அவர் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளார்.

SSB, UP காவல்துறையிடம் இருந்து மேலும் தகவலைக் கோரும் விசாரணை அமைப்புகள் 

இதற்கிடையில், உத்தரபிரதேசத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (UP-ATS) மற்றும் மத்திய அமைப்புகள் சீமா ஹைதருக்கு எதிராக தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளன. பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து நொய்டாவை அடைய நேபாளம் வழியாகச் சென்ற சீமா ஹைதர் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு, ஷாஸ்த்ரா சீமா பல் என்னும் எல்லை காவல் படை மற்றும் உத்தரப் பிரதேச காவல்துறையிடம் இருந்து அறிக்கை கோரியுள்ளது. 

Trending News