வெப்ப அலை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு ஏப்ரல் 24 முதல் 27 வரை மூன்று நாள் விடுமுறை அறிவிப்பு
Heatwave Alert, Holiday in Schools: வெப்ப அலை எச்சரிக்கையை அடுத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24 முதல் 27 வரை மூடப்படும் என பள்ளிகள் கல்வி துறை அறிவித்துள்ளது.
அகர்தலா, திரிபுரா: திரிபுராவில் வெப்ப அலை நிலைமையை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஏப்ரல் 24 முதல் 27 வரை மூடப்படும் என அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
இன்று (ஏப்ரல் 24, புதன்கிழமை) திரிபுரா மாநிலத்தில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், சாதாரண அளவை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது. மேலும் இது இந்த வார இறுதியில் வடகிழக்கு மாநிலத்தில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) எச்சரித்துள்ளது.
ஏப்ரல் 24 முதல் 27 வரை மூடப்படும் அனைத்து பள்ளிகளும் மூடல்
திரிபுராவில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24 முதல் 27 வரை மூடப்படும் என பள்ளிகள் கல்வி துறை கூடுதல் செயலாளர் என்.சி.சர்மா தெரிவித்துள்ளார்.
வெப்ப அலை மாநில பேரிடராக அறிவிப்பு
மேலும், மாநிலம் முழுவதும் வெயிலின் பிடியில் சிக்கித் தவிப்பதாகவும், இந்த நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் மற்றொரு அதிகாரி தெரிவித்தார். இந்த வெப்பச் சலனம் மற்றும் ஈரப்பதமான வானிலையைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு இதை ஒரு குறிப்பிட்ட மாநில பேரிடராக அறிவித்துள்ளது.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை
இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.
காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்
மேலும், மாநில மக்களின் பாதுகாப்பிற்காக அனைத்துப் பகுதிகளிலும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், அவசரநிலை மையங்கள் மற்றும் விரைவு நடவடிக்கை குழுக்களை செயல்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வெயிலில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் வெப்ப அலை
கிழக்கு இந்தியாவின் பெரும் பகுதிகளைத் தாக்கிவரும் வெப்ப அலையானது, தற்போது நேற்று முதல் (ஏப்ரல் 23, செவ்வாய்கிழமை) தென் இந்தியா மாநிலங்களுக்கும் பரவியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க - அதிகபட்ச வெப்பத்தை அனுபவிக்கும் நாட்டின் மிகவும் வெப்பமான நகரங்கள்...
கடுமையான வெப்ப அலை இருக்கலாம்
அடுத்த ஐந்து நாட்களில் மேற்கு வங்காளம், கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, பீகார், சிக்கிம், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை ஏற்படலாம் என எதிர் பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
வெப்ப அலை என்றால் என்ன?
வெப்ப அலை என்பது இயல்பு வெப்ப நிலையை விட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வு தொடர்ச்சியாக மூன்று தினங்கள் அல்லது அதற்கு மேல் தொடர்வதை குறிக்கும். மேலும் உலக வானிலை ஆய்வு அமைப்பானது தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் அல்லது அதற்கு மேல் இயல்பு வெப்பநிலையை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் போது வெப்ப அலை ஏற்படும் என வரையறை செய்துள்ளது.
மேலும் படிக்க - உடல் சூட்டை தணிக்க சில எளிய வழிகள்! இதை படிக்கவும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ