குஜராத்துடன் சேர்ந்து ஜூலை 4 ம் தேதியும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜெனாமி தெரிவித்தார். குஜராத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கடும் மழை பெய்யும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் நாளை டெல்லியில் மழை பெய்யும். மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் வெப்ப அலை நிலைகள் தொடரும். "


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. தென்மேற்கு, மேற்கு-மத்திய மற்றும் கிழக்கு-மத்திய அரேபிய கடல், மகாராஷ்டிரா (Maharashtra) கடற்கரை மற்றும் மத்திய வங்காள விரிகுடா ஆகியவற்றில் மிகவும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


 


READ | COVID-19 தொற்றுக்கு மத்தியில் Red Alert எச்சரிக்கை!! மும்பையில் கனமழை பெய்ய வாய்ப்பு


இதற்கிடையில் அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை (Mumbai), ரத்னகிரி மற்றும் ராய்காட் ஆகிய இடங்களில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (The India Meteorological Department- IMD) தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுத்துள்ளது. சனிக்கிழமை பால்கர், மும்பை (Mumbai), தானே மற்றும் ராய்காட் ஆகிய இடங்களில் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு உள்ளது.


 


READ | கடும் வெப்பத்தை தணிக்க வந்துவிட்டது பருவ மழை... எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?


 


முன்னதாக, மும்பை (Mumbai) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் சனிக்கிழமை, சில இடங்களில் கனமழை (Heavy Rainfall) முதல் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த 24 மணிநேரங்களுக்கு, அதாவது ஜூலை 3 முதல் 4 வரை, மும்பை (Mumbai), ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் தெரிவித்தார். இந்த காலகட்டத்தில், சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.