கடும் வெப்பத்தை தணிக்க வந்துவிட்டது பருவ மழை... எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?

தில்லியிலும், தேசிய தலைநகர் வலைய பகுதியிலும், பல இடங்களில் மழை பெய்தது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இது நிவாரணத்தை கொடுத்துள்ளது. தில்லியில், ஜூன் 29ம் தெதி மழை காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்கு நாள் முன்னதாக மழை பெய்துள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated: Jun 24, 2020, 02:19 PM IST
கடும் வெப்பத்தை தணிக்க வந்துவிட்டது பருவ மழை... எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?
IMAGE FOR REPRESENTATION

புது தில்லி: தில்லியிலும், தேசிய தலைநகர் வலைய பகுதியிலும், பல இடங்களில் மழை பெய்தது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இது நிவாரணத்தை கொடுத்துள்ளது. தில்லியில், ஜூன் 29ம் தெதி மழை காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்கு நாள் முன்னதாக மழை பெய்துள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Also Read |அனைத்து வீடுகளிலும் ஜூலை 6 ஆம் தேதிக்குள் கொரோனா பரிசோதனை..

வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையும் மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஷியஸாக இருக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் (IMD)கூறியுள்ளது.

Also Read |13,000 ரூபாயில் தொடங்கப்பட்ட ‘பதாஞ்சலி’ முன்னணி நிறுவனங்களில் ஒன்றானது எப்படி?

முன்னதாக, தில்லியில் உள்ள பிராந்திய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் (RWFC) தலைவர் டாக்டர், குல்தீப் ஸ்ரீவாஸ்தவா, தில்லியிலும், அதனை ஒட்டியுள்ள குர்கான், ஃபரிதாபாத், நாய்டா மற்றும் காஸியாபாத் ஆகிய இடங்களில், நல்ல மழை பெய்யலாம் எனக் கூறியிருந்தார்.

மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), உத்திர பிரதேசத்தில் உள்ள நரோரா, அலிகர், மொராதாபாத், அம்ரோஹா, பிஜ்னோர் மற்றும் ஜஹான்கிராபாத் ஆகிய இடங்களில் புதன் கிழமை மழை பெய்யலாம் என முன்னதாக கூறியிருந்தது.

இந்த மழை, கடும் வெயிலால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மொழியாக்கம்: வித்யா கோபாலகிருஷ்ணன்