மகாராஷ்டிராவில் கனமழை காரணமாக 3 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிராவில் பெய்து வரும் பருவமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் பெய்து வரும் பருவமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. கனமழையின் காரணமாக இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 10 ஆம் தேதி மும்பைக்கு வரும் பருவமழை, இந்த முறை இரண்டு வாரங்கள் தாமதத்திற்கு பிறகு துவங்கியது. கடந்த சில நாட்களாகவே மிதமான மழை பெய்து வந்தது. இன்று மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பலத்த கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை ஜூன் 29 வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை முதல் மும்பையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குர்லா உள்ளிட்ட பகுதிகளிலும், தானே மற்றும் புனே போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்து பலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.