இந்தியாவின் கோவிட் -19 சிகிச்சை நெறிமுறையில், நோயின் தொடக்க நிலையில், மிதமான தொற்று உள்ள நிலையில் பிளாஸ்மா சிகிச்சை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வந்த  கொரோனா சிகிச்சை முறைகளில்  பிளாஸ்மா சிகிச்சையும் ஒன்று.  அதாவது கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் பிளாஸ்மாவை தானமாக பெற்று, அதாவது அவர்கள் உடலில் இருக்கும் ஆண்டிபாடிகளை கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இந்நிலையில், முதன்மை அறிவியல் ஆலோசகர் கே. விஜய் ராகவனுக்கு, சில மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள்  எழுதிய கடிதத்தில்,  COVID-19 தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது எந்த வகையில் சிறப்பானதாக இருக்கும் என விஞ்ஞான ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதோடு, எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பதற்கும் ஆதாரம் ஏதும் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.


"தற்போதைய ஆராய்ச்சி சான்றுகள் ஏகமனதாக COVID-19 சிகிச்சைக்கு  பிளாஸ்மா சிகிச்சை வழங்குவதால் எந்த நன்மையும் இல்லை என்பதை எடுத்து காட்டுகிறது. இருப்பினும், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இது தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகிறது," என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


ALSO READ | COVID-19: இந்தியாவின் இந்த கிராமத்தில் இன்று வரை கொரோனா இல்லை; இல்லவே இல்லை


இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற COVID-19 தொடர்பான ICMR -தேசிய பணிக்குழுவின் கூட்டத்தில் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இதில் அனைத்து உறுப்பினர்களும் வயதுவந்த கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, ப்ளாஸ்மா சிகிச்சை பயன்படுத்துவதற்கான அனுமதியை திரும்ப பெற பரிந்துரைக்கப்பட்டது.  


பணிக்குழுவின் பரிந்துரையை கருத்தில் கொண்டு, COVID-19  சிகிச்சை தொடர்பாக வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில், பிளாஸ்மா சிகிச்சை முறைக்கான அனுமதியை நீக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.


ALSO READ | அவசர காரணங்கள், அத்தியாவசிய தொழில் நிறுவனங்களுக்கு உடனடி இ-பதிவு: தமிழக அரசு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR