இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை, முழு வீச்சில் பரவை வரும் நிலையில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தை இன்றுவரை தொட கூட முடியாத நிலையில் கொரோனா உள்ளது.
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கொரோனா தொற்றுநோய் தீவிரமாக பரவி வரும் நிலையில், இமாசலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள இந்த கிராமம் இன்றுவரை கொரோனா தொற்று நோயால் (Corona Virus) பாதிக்கப்படவில்லை. கொரோனா ப்ரவல் தொடங்கியதிலிருந்து, இந்த கிராமத்தில் ஒரு கொரோனா வைரஸ் பாதிப்பு கூட இல்லை. கொரோனா காலம் முழுவதும் இந்த கிராமத்திற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இங்குள்ளவர்கள் தடை விதித்துள்ளதால் இது சாத்தியமானது.
2350 மக்கள் தொகை கொண்ட இந்த கிராமத்தில், ஜாம்லு (ஜாமதக்னி ரிஷி) தெய்வத்தின் கட்டளையை மக்கள் பின்பற்றுகின்றனர் . இங்குள்ளவர்கள் தங்களை அலெக்ஸாண்டரின் சந்ததியினர் என்று கருதுகின்றனர். மலானா கிராமத்திற்கு ஹிமாசல் பிரதேச மாநில பஸ் போக்குவரத்து சேவை மட்டுமே உள்ளது. கொரோனா காரணமாக, அதற்கும் இங்குள்ள மக்கள் அனுமதிக்கவில்லை. இந்த வருடம் ஏப்ரல் மாதம் ஒரு வருடம் கழித்து தடை நீக்கப்பட்ட நிலையில், இப்போது அது மீண்டும் மூடப்பட்டுள்ளது.
அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களும் கிராமத்தின் பிரதான வாயிலுக்கு வெளியே மக்களைச் சந்திக்கிறார்கள். கடந்த ஏப்ரல் முதல், வெளியாட்கள் கிராமத்திற்குள் நுழையவில்லை. மலானா பஞ்சாயத்து தலைவர்கள் கிராமத்தில் இதுவரை கொரோனா வழக்கு எதுவும் பதிவாகவில்லை என்று கூறினார்.
ALSO READ | Watch Viral Video: ‘குடிமகளுக்கு’ நேர்ந்த வேதனை; ஏறிய போதை நொடியில் இறங்கிய சோதனை
மக்கள் தங்கள் மட்டத்தில் கொரோனாவை கையாண்டு வருகிறார்கள், அவர்களுக்கு ஜம்லு தெய்வத்தின் முழு ஆசீர்வாதமும் உண்டு. கொரோனா காலத்தில், கிராம மக்களும் மிகவும் தேவை என்றால் மட்டுமே வெளியே போகிறார்கள், அதே நேரத்தில் கிராமத்திற்கு வெளியாட்கள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பஞ்சாயத்து தலைவர் ராஜு ராம் தெரிவித்தார்.
மாவீரன் அலெக்சாண்டர் தனது படையுடன் மலானா பகுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அலெக்சாண்டரின் விசுவாசமான பல வீரர்கள் இந்தியாவின் பல பகுதிகளை கைப்பற்றி, போரஸ் மன்னருடன் போரைத் தொடர்ந்து காயமடைந்தனர். அலெக்ஸாண்டரும் சோர்வாக இருந்ததால் வீட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்பினார், ஆனால் அலெக்சாண்டர் பியாஸ் நதியை கடந்து இந்த கிராமத்திற்கு வந்த போது, இந்த அழகான சூழ்நிலை அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. அவர் பல நாட்கள் இங்கு தங்கியிருந்தார். அவர் திரும்பிச் சென்றபோது, அவரது வீரர்கள் சிலர் இந்தியாவிலேயே தங்கிவிட்டதாகவும், பின்னர் அவர்கள் இங்கு குடியேறி கிராமத்தில் குடியேறினர் எனவும் கூறப்படுகிறது .
இந்த கிராமத்தில், யாராவது ஒரு குற்றம் செய்தால், தண்டனையை இங்குள்ள ஜம்லு தெய்வம் தான் தண்டனை வழங்குமே தவிர, சட்டமல்ல. இந்தியாவின் எந்த சட்டமும் காவல் துறை விதிமுறைகளும் இங்கு செல்லாது. கிராமத்தில் கடைபிடிக்கப்படும் சிறப்பு பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் மற்றும் சட்டம் காரணமாக, இந்த கிராமம் உலகின் பழமையான ஜனநாயகம் என்றும் அழைக்கப்படுகிறது.
ALSO READ | Viral Video: பாதுகாக்க வேண்டிய போலீஸாரே திருட்டில் ஈடுபட்ட சம்பவம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR