பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து இரு படகுகள் இந்தியாவை நோக்கி புறப்பட்டு உள்ளது என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கராச்சி துறைமுகத்தில் இருந்து இரு படகுகளின் நகர்வு குறித்து தகவல் தெரிவித்து உள்ள உளவுத்துறை இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை தயார் மற்றும் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரித்து உள்ளது. இரு படகுகளும் கடலில் எங்கு உள்ளது என்பதை உளவுத்துறை சுட்டிக்காட்டி உள்ளது. 


குஜராத் கடற்பகுதியில் நேற்று 9 பேருடன் வந்த பாகிஸ்தான் மர்ம படகு ஒன்றை இந்திய கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்தனர். இந்நிலையில் இந்த இரு படகுகளின் நகர்வால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.