Mumbai: லிஃப்டில் தனியாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடுமை
மும்பையில் நடந்த கொடூரமான சம்பவம் குழந்தையை தனியாக லிஃப்டில் செல்ல அனுமதிக்கக்கூடாது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. தனது குடும்பத்தை சேர்ந்த பிற குழந்தைகளுடன் லிஃப்டுக்குள் இருந்த முகமது ஹுசைஃபா ஷேக் (Mohammad Huzaifa Shaikh), நான்காவது மாடிக்கு சென்றார். அங்கு நடந்த கொடுமை இது....
புதுடெல்லி: மும்பையில் நடந்த கொடூரமான சம்பவம் குழந்தையை தனியாக லிஃப்டில் செல்ல அனுமதிக்கக்கூடாது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. தனது குடும்பத்தை சேர்ந்த பிற குழந்தைகளுடன் லிஃப்டுக்குள் இருந்த முகமது ஹுசைஃபா ஷேக் (Mohammad Huzaifa Shaikh), நான்காவது மாடிக்கு சென்றார். அங்கு சென்றதும் லிஃப்ட் நின்றது. சிறுவன் வெளியே வந்தபோது, லிஃப்டின் கிரில்லுக்கும், பாதுகாப்பு கதவுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார், லிஃப்ட் ஐந்தாவது மாடியை நோக்கி நகர்ந்தபோது சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மும்பையின் தாராவி பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி கட்டிடத்தில் சனிக்கிழமையன்று 5 வயது சிறுவன் லிஃப்ட் விபத்தில் இறந்தார் என்று போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இந்த சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் நடந்தது மற்றும் முழு சம்பவமும் லிப்டுக்குள் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மும்பையில் நடந்த கொடூரமான சம்பவம் குழந்தையை தனியாக லிஃப்டில் செல்ல அனுமதிக்கக்கூடாது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. தனது குடும்பத்தை சேர்ந்த பிற குழந்தைகளுடன் லிஃப்டுக்குள் இருந்த முகமது ஹுசைஃபா ஷேக் (Mohammad Huzaifa Shaikh), நான்காவது மாடிக்கு சென்றார். அங்கு சென்றதும் லிஃப்ட் நின்றபோது, வெளியே வந்தபோது, லிஃப்டின் கிரில்லுக்கும், பாதுகாப்பு கதவுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார், லிஃப்ட் ஐந்தாவது மாடியை நோக்கி நகர்ந்தபோது சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
"சிறுவன் கட்டிடத்தின் நான்காவது மாடியில் உள்ள தனது வீட்டிற்குச் செல்ல லிப்டை எடுத்துக் கொண்டான், லிப்டிலிருந்து வெளியேறும்போது, அதன் வெளிப்புற மற்றும் உள் கதவுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டான்" என்று போலீசார் தெரிவித்தனர்.
"சிறுவன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து விட்டனர்" என்று ஒரு அதிகாரி கூறினார்.
இந்த சம்பவம் மதியம் 12:30 மணியளவில் தாராவியின் பல்வாடி (Palwadi) பகுதியில் உள்ள கோஸி ஷெல்டர் (Cozy Shelter) கட்டடத்தில் நிகழ்ந்தது.
இந்த இறப்பு, தற்செயலானது என்று ஷாஹுநகர் (Shahunagar) போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் காரணம் என்ன என்பதைக் கண்டறிய மாடிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை எடுத்து பரிசீலித்த போலீசார், தற்போது எதுவும் சந்தேகத்திற்குரியதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.
Read Also | பிரபல Youtuber வீடியோ படபிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் 25 கோடி ரூபாய் சேதம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR