Crime News: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 47 வயதான கந்துவட்டிக்காரர் ஒருவர், கொடுத்த கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவரின் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹடப்சர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குற்றம் சாட்டப்பட்ட இம்தியாஸ் ஹெச். ஷேக், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு ரூ. 40 ஆயிரம் (வட்டியில்லா) கடனாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹடப்சரில் நடந்துள்ளது, இருப்பினும் சமீபத்தில் தான் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும், தம்பதியினரால் கடனைத் திருப்பித் தர முடியவில்லை, அதன் பிறகு ஷேக் அவர்களை துஷ்பிரயோகம் செய்து மிரட்டத் தொடங்கியுள்ளார்.


பிப்ரவரியில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் அந்த தம்பதியை ஹடப்சர் அரசு காலனியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு வரவழைத்தார். அங்கு அவர்களிடம் நிலுவையில் உள்ள பணத்தை மீண்டும் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால், அவர்களிடம் திருப்பி செலுத்த பணம் இல்லை என கூறியுள்ளனர்.


பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், ஷேக் கத்தியைக் காட்டி, கணவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டி, அங்கேயே அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | வகுப்பறையில் 'நிர்வாணமாக' தூங்கிய ஹெட்மாஸ்டர்... சஸ்பெண்ட் செய்த அரசு!


இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவர் அந்த பெண்ணிடம் பலமுறை பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பாலியல் அத்துமீறிலில் ஈடுபடும்போது வீடியோவும் எடுத்துள்ளார். அந்த பெண்ணும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். 


அந்த பெண் தனது இச்சைக்கு இணங்க மறுத்ததால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வீடியோ வைரலானது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அறிந்ததும், அவர் மகாராஷ்டிரா ஹடப்சர் காவல் நிலையத்தை அணுகி கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) புகார் அளித்தார். அந்த பெண்ணின் புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அதன் காவல் ஆய்வாளர் ரவீந்திர ஷெலாக் கூறினார்.


மேலும் கூறிய அவர்,"நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடித்து கைது செய்தோம். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அவர் வியாழக்கிழமை வரை இரண்டு நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன" என்றார். 


குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புனே நகரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தாலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டவர்களை இதேபோன்று சிக்க வைத்து அவர்களயும் பாதிப்புக்கு உள்ளாக்கினார்களா என்பதையும் போலீசார் கண்டறிய முயற்சிக்கின்றனர்.


மேலும் படிக்க | இன்னைக்கு ஒரு புடி! போலீஸ் நிலையத்தில் சிக்கன் சமையல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ