வகுப்பறையில் 'நிர்வாணமாக' தூங்கிய ஹெட்மாஸ்டர்... சஸ்பெண்ட் செய்த அரசு!

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் மாணவர்கள் முன் நிர்வாணமாக தூங்கியதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 28, 2023, 10:16 AM IST
வகுப்பறையில் 'நிர்வாணமாக' தூங்கிய ஹெட்மாஸ்டர்... சஸ்பெண்ட் செய்த அரசு! title=

பஹ்ரைச் (உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாநிலத்தில் உள்ள விஷேஷ்வர்கஞ்சில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குடிபோதையில் மாணவர்கள் முன் நிர்வாணமாக தூங்கியதாகக் கூறப்படும் அதிர்ச்சியான சம்பவத்தில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. துர்கா பிரசாத் ஜெய்ஸ்வால் என்ற தலைமை ஆசிரியர் ஆபாசமான செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் வீடியோவும் ஆன்லைனில் வெளி வந்தது.

பஹ்ரைச் பகுதியின் கல்வி அதிகாரி நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வைரலான வீடியோவின் உண்மைத் தன்மை இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெய்ஸ்வால் பஹ்ரைச்சில் உள்ள ஷிவ்பூர் பைராகி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார்.

சம்பவம் குறித்து கடும் கோபத்தை வெளியிட்ட பல பெற்றோர்கள், ஜெய்ஸ்வால் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல என்று கூறினர். மாணவர்கள் முன்னிலையில் அவர் அடிக்கடி ஆபாசமான செயல்களில் ஈடுபடுவதாகவும், வகுப்பில் அடிக்கடி ஆடைகளை கழற்றிவிட்டு ஓய்வெடுப்பதாகவும் பெற்றோர் கூறினர். ஜெய்ஸ்வாலின் நடத்தையால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டதாகவும் சில பெற்றோர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | காயத்துடன் மயக்க நிலையில் இருந்தவர் மீது சிறுநீர் கழித்து அடித்த கொடூரம்!

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததால், கல்வித் துறை அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். "துர்கா பிரசாத் ஜெய்ஸ்வால் மீது எங்களுக்கு புகார் வந்தது. அப்பகுதி கல்வி அதிகாரி நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்" என கல்வித் துறை கூறியுள்ளது

 கல்வித் துறை அதிகாரி அவ்யக்த் ராம் திவாரி, "துறை ரீதியான விசாரணை நடத்தப்படுகிறது. தேவைப்பட்டால், தலைமை ஆசிரியர் மீது முதல் தகவல் அறிக்கை  (FIR) பதிவு செய்யப்படும்" என்று கூறினார். இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னரே அதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்படும் என்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். துறை ரீதியான விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் FIR பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | நாய் கடித்த சிறுமி சாகும் முன் 40 பேரை கடித்த சம்பவம்! அதிர்ச்சியில் கிராம மக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News