பிரதான மந்திரி அவாஸ் யோஜனா(PMAY) திட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Zee Media குழமத்திற்கு ப்ரதியேக பேட்டி (India Ka DNA 2019 Conclave) அளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவிக்கையில்... 219-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குள் PMAY திட்டத்தின் கீழ், பொருளாதர நிலையில் பின்தங்கிய மக்களுக்கு வீடு கட்டி தரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


இந்த திட்டத்தின் கீழ் கடந்த மே 31-ஆம் நாள் வரையில் 475 மில்லியன் வீடுகள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நடைப்பெறும் ஜூன் மாத முடிவிற்குள் 51 மில்லியன் வீடுகளை கட்ட ஒப்புதல் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரவிருக்கும் 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குள் திட்டமிட்டப்படி அனைவருக்கும் வீடு கட்ட அனுமதி அளிக்கப்பட்டு விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் 2022-ஆம் ஆண்டிற்கு அனைத்து நலிவுற்ற மக்களுக்கும் வீடு கட்டி தரவேண்டும் என்பதே மத்திய அரசின் லட்சியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


PMAY திட்டத்தில் பல குலறுபடிகள் நிலவுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இந்த திட்டத்தில் ஊழல்கள், குலறுபடிகள் ஏதும் நிகழவில்லை என்பதை நிறுபிக்க நாங்கள் ஆதாரங்கள் பலவற்றையும் வைத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


PMAY திட்டத்தின் குறிக்கோள்களாக இருப்பவை என அவர் குறிப்பிடுகையில்...


  • குடிசை மறுவாழ்வு: குடிசை அற்ற கிராமங்கள், நகரங்களை உருவாக்குதல். குடிசை மாற்று வாரியத்தின் கீழ் குடிசை பகுதிகளை அரவே அழிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் கொள்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • பயனாளியின் தலைமையிலான கூட்டாண்மை: பயனாளியின் தலைமையிலான கூட்டாண்மை கீழ், வீட்டின் உரிமையாளர் அவரது வீட்டை சரிசெய்ய அரசாங்கத்திலிருந்து நிதி பெறலாம்.

  •  கட்டுப்பாடற்ற கூட்டு: இந்த வெக்டார், மையம் மற்றும் மாநில கீழ் மலிவு வீடுகளை உருவாக்க நிதி பகிர்ந்து கொள்ள ஒன்றாக வழங்கப்படுகிறது.

  •  கடன் இணைந்த மானியம் திட்டம்: இந்த திட்டத்தின் கீழ், மக்களின் பணத்திற்கு வட்டி பெறலாம். உதாரணமாக, வங்கி 12 சதவிகிதம் வட்டி விகிதத்தில் வீட்டு கடன் வழங்கினால், கடனாளர் 4 சதவிகிதம் வரை CLSS க்கு விண்ணப்பிக்கலாம். இது இயல்பான வட்டியை காட்டிலும் 8% குறைவாகும்.


இதற்கிடையில், CREDAI தலைவர் கீதாம்பார் ஆனந்த், "பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பொதுமக்கள் 2,30,000 ரூபாய் வரை பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.