இந்திய சட்டப்படி எவ்வளவு தொகை ஹர்திக் அவரது மனைவிக்கு கொடுக்க வேண்டும்?
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் விவாகரத்து செய்துள்ளனர். ஹர்திக் எவ்வளவு சொத்துக்களை இழக்க நேரிடும் என்று பார்ப்போம்.
Hardik Pandya and Natasa Stankovic: ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் இருவரும் கடந்த மே மாதம் 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டு ஜூலை 30 அன்று அவர்களுக்கு அகஸ்தியா என்ற குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் முறையாக திருமணம் செய்து கொள்ளாத இருவரும் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உதய்பூரில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. டி20 உலக கோப்பை துவங்கும் முன்பு நடாசா அவரது இன்ஸ்டாகிராமில் இருந்து ஹர்திக் பாண்டியாவின் புகைப்படங்களை நீக்கினார். இது அவர்கள் பிரிந்ததை உறுதிப்படுத்தியது.
மேலும் படிக்க | பல கோடி ஒப்பந்தத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையும் பென் ஸ்டோக்ஸ்!
ஆனாலும் இருவரும் இது தொடர்பாக மவுனம் காத்து வந்தனர். இந்நிலையில் நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக கடந்த வியாழன் அன்று இருவரும் சமூக ஊடகங்களில் அறிக்கை மூலம் தெரிவித்தனர். நடாசாவும் நானும் பரஸ்பரமாக பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம் என்று அதில் குறிப்பிட்டு இருந்தனர். நடாசா தனது மகன் அகஸ்தியாவுடன் மும்பையை விட்டு வெளியேறிய பிறகு பதிவிட்டுள்ள அறிக்கையில், "4 வருடங்கள் ஒன்றாக இருந்த பிறகு, நானும் ஹர்திக்கும் பரஸ்பரமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இது தான் எங்கள் இருவருக்கும் சிறந்தது என்று நாங்கள் உணர்கிறோம், இதனை சரி செய்ய முயற்சி செய்தோம். ஆனால் இறுதியில் இதுதான் எங்களுக்கு சிறந்த முடிவாக இருந்தது. இது எங்களுக்கு கடினமான தேர்வாக இருந்தது.
நானும் ஹர்தீக் பாண்டியாவும் எங்களது மகன் அகஸ்தியாவிற்கு உறுதுணையாக இருப்போம். இருவரிடமும் அவர் வளர்வார். அவரது மகிழ்ச்சிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய உள்ளோம். இந்த கடினமான மற்றும் முக்கியமான நேரத்தில் எங்களுக்கு தனியுரிமை வழங்க உங்கள் ஆதரவையும் புரிதலையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா அவரது மனைவியை விவாகரத்து செய்துள்ளதால் தனது சொத்தில் இருந்து சில பங்குகளை விட்டுத்தர வேண்டும். இதன் மூலம் ஹர்திக் பாண்டியா பாதி சொத்துக்களை இழக்க நேரிடும்.
எவ்வளவு சொத்துக்களை ஹர்திக் பாண்டியா இழப்பார்?
நடாசா ஸ்டான்கோவிச்சை விவாகரத்து செய்ததால் கிட்டத்தட்ட 70% சொத்துக்களை ஹர்திக் இழக்க நேரிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் ஒரு பழைய வீடியோவில் ஹர்திக் தனது பெயரில் எந்த சொத்துக்களும் இல்லை என்றும், அனைத்தும் தனது தாயார் பெயரில் தான் இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார். ஆனாலும் ஹர்திக் பாண்டியாவின் சொத்துக்களில் இருந்து எந்த தொகையையும் நடாசா ஸ்டான்கோவிச் கேட்டதாக செய்திகள் வெளியாகவில்லை.
ஹர்திக் பாண்டியாவின் நிகர மதிப்பு
ஹர்திக் பாண்டியாவின் நிகர சொத்து மதிப்பு ரூ. 100 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. பிசிசிஐ ஒப்பந்தத்தில் மாதம் 1.5 கோடியும், ஆண்டுக்கு 5 கோடி ரூபாயும் பெறுகிறார். மேலும் வணிக ஒப்புதல்கள் மற்றும் ஸ்பான்சர் மூலம் பெரும் தொகையை பெறுகிறார் ஹர்திக். வதோதராவில் ரூ. 3.6 கோடிக்கு பிரமாண்ட வீடு, மும்பையில் ரூ. 30 கோடி மதிப்புள்ள பிளாட் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் அதிக முதலீடு செய்துள்ளார்.
மேலும் படிக்க | டி20க்கு கேப்டனாக இருந்தும் ஒருநாள் அணியில் சூர்யாவிற்கு இடமில்லை! ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ