ஜனவரி 1 முதல் முன்பதிவு.. குழந்தைகளுக்கான தடுப்பூசி பதிவு செய்வது எப்படி?
நாட்டில் ஓமிக்ரான் தொற்றுகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அனைத்து நிபுணர்களும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை மத்திய அரசு பரிசிலிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: கொரோனா மாறுபாட்டான ஓமிக்ரானின் வளர்ந்து வரும் பீதிக்கு மத்தியில், சமீபத்தில் டிசிஜிஐ குழந்தைகளுக்கு வழங்கப்படும் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு அவசர காலங்களில் போடலாம். 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு DGCI ஒப்புதல் அளித்திருந்தாலும், 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி அளவை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. CoWin போர்ட்டலில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பதிவு ஜனவரி 1 முதல் தொடங்கும். இது சம்பந்தமாக, உங்கள் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி போட நீங்கள் எப்படி எங்கு பதிவு செய்வது என்பதைக் அறிந்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி ஒப்புதல்:
நாட்டில் ஓமிக்ரான் தொற்றுகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அனைத்து நிபுணர்களும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை மத்திய அரசு பரிசிலிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலகின் பிற நாடுகளில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நீண்ட நாட்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. அமெரிக்கா (United States), பிரிட்டன் (United Kingdom) உட்பட பல நாடுகளில், இந்த வயதினருக்கு முன்பாகவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | கோவிட்-19 தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா? நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை!
குழந்தைகளுக்கு தடுப்பூசி பதிவு:
- ஜனவரி 1 முதல் CoWin போர்ட்டலில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பதிவு தொடங்கும்.
- முன் பதிவு செய்ய ஆதார் அட்டை இல்லாதவர்கள் பள்ளி அடையாள அட்டையை (Student Identity Card) பயன்படுத்திக் கொள்ளலாம்
- ஜனவரி 3 முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும்.
- தற்போது, இந்த தடுப்பூசி இந்திய குழந்தைகளுக்கு மட்டுமே செலுத்தப்படும்.
- இதற்கு 28 நாட்கள் இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை டோஸ்:
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கையாக 3 ஆம் டோஸ் வேக்சினான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி ஜனவரி 10 முதல் தொடங்கும். இந்த டோஸும் இலவசமாக செலுத்தப்படும்.
வயதானவர்களுக்கு பூஸ்டர் டோஸ்:
- புதிய ஆண்டில் பதிவு தொடங்கும்
- செயல்முறை கடந்த முறை போலவே இருக்கும்
- மூன்றாவது டோஸுக்கு, 9 மாதங்கள் இடைவெளி இருக்கும்.
அதாவது, இந்த 3 ஆம் டோஸ் வேக்சின் 2 ஆம் டோஸ் போடப்பட்ட நாளில் இருந்து 9 முதல் 12 மாத இடைவெளியில் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | குழந்தைகளுக்கான தடுப்பூசி; ஜனவரி 1முதல் CoWIN செயலியில் முன் பதிவு தொடக்கம்!
குழந்தைகளுக்கான தடுப்பூசி:
உலகில் உள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் பற்றி பேசுகையில், ஃபைசர் பயோடெக் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசி அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தொடங்கியது.
மாடர்னாவின் தடுப்பூசி 12 வயது மேற்பட்டவர்களுக்கு போடப்படுகிறது. இது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
ஸ்புட்னிக் V இன் சோதனை 12-17 வயதுக்குட்பட்டவர்களுக்கு நடக்கிறது.
ஜான்சன் & ஜான்சன் 12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசியையும் தயாரித்து வருகிறது, அதன் சோதனை நடந்து வருகிறது.
ALSO READ | கொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணுக்களை பாதிக்குமா? பகீர் தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR