மத்திய அரசு பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ஆன்லைன் பாடங்கள் நடத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (HRD) செவ்வாய்க்கிழமை பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ஆன்லைன் பாடங்கள் நடத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது
1-8 வகுப்புகளுக்கு தலா 45 நிமிடங்களுக்கான இரண்டு ஆன்லைன் அமர்வுகளும், 9-12 வகுப்புகளுக்கு 45 நிமிடங்களுக்கான நான்கு அமர்வுகளும் நடத்தப்படலாம் என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ராமேஷ் போக்ரியால் கூறினார்.
ALSO READ | கிண்டர் கார்டன் ஆன்லைன் வகுப்பில் கர்ஜிக்கும் புலிகள்… அசத்தும் கேரள ஆசிரியர்..!!
தொடக்கி நிலை மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு நேரம் 30 நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் வலியுறுத்தினார்.
COVID-19 தொற்றுநோய் நெருக்கடி காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் குழந்தைகளின் கல்வி பாதித்துள்ளது என்று அவர் கூறினார்.
கொரோனா தொற்று நிலையை கருத்தில் கொண்டு, குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க சமபந்தப்பட்ட யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் பொருத்தமான முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். எனவே, ஆன்லைன் மூலம் தரமான கல்வியை வழங்க பொருத்தமான ஒரு சிறந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும் என மனித வள மேம்பாட்டு அமைச்சர் கூறினார். .
புதுதில்லியில் ஒரு ஆன்லைன் கல்விக்கான வழிகாட்டுதல்களை மனித வள மேம்பாட்டு அமைச்சர் போக்ரியால் வெளியிட்டார். மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரேயும் இணையம் மூலம் இதில் கலந்து கொண்டார்.
லாக்டவுன் காரணமாக தற்போது வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் / டிஜிட்டல் கல்வியை வழங்கும் போது, குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த PRAGYATA நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
ALSO READ | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு…. Railway துறையின் அசத்தல் திட்டம்..!!
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர், ஆன்லைன் கல்வி தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகளைக் அறிந்து கொள்ள இந்த வழிகாட்டுதல்கள் உதவும் என்று அவர் கூறினார்.
இந்த வழிகாட்டுதல்கள் சைபர் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை நடவடிக்கைகளை உறுதி செய்யும் வகையில், டிஜிட்டல் கல்வியை செயல்படுத்துவதற்கான திட்டங்களை விவரிக்கிறது.
பெற்றோர்களைப் பொறுத்தவரை, இணைய கல்வி தொடர்பான சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உடல், மன ஆரோக்கியத்தின் அவசியத்தைப் புரிந்துகொள்ள இந்த வழிகாட்டுதல் உதவுகிறது.
டிஜிட்டல் சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதன் காரணமாக குழந்தைகள் உடல் நலன் பாதிக்கப்படாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆன் லைன் கல்வி தொடர்பாக பின்பற்ற வேண்டிய உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான வழிகாட்டுதல்கள் வலியுறுத்தப்படுகின்றன.