Maharastra Bizarre Incident: மகாராஷ்டிராவில் ஒரு அதிர்ச்சித் தரக்கூடிய சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் என்று முன்னர் அழைக்கப்பட்ட தற்போது சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடந்துள்ளது. அதன் சிசிடிவி வீடியோவும் வெளியாகி இருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடியோ வைரல்


சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள பிட்கின் கிராமப்புற அரசு மருத்துவமனையில், போதைக்கு அடிமையான 45 வயதான மருத்துவர் ஒருவர் நிர்வாணமாக அதன் வளாகத்தில் சுற்றி திரிந்துள்ளார். இணையத்தில் வெளியான இந்த சம்பவத்தின் சிசிடிவியை பார்க்கும்போது,  போதைக்கு அடிமையான அந்த மருத்துவர் மருத்துவமனையில் வளாகத்தில் நிர்வாணமாக நடப்பதை பார்க்க முடிந்தது. கையில் ஒரு துணியை வைத்துக்கொண்டு மருத்துவமனை முழுவதும் தள்ளாடியபடியே நடந்து வந்தார். இந்த வீடியோ மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. 


சுகாதார சேவைகளை மேற்பார்வையிடும் மாவட்ட சிவில் அறுவை சிகிச்சை நிபுணரான தயானந்த் மோதிபாவ்லே, இதுகுறித்து விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து தகுந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | சமுத்திரையான்... 2025ம் ஆண்டு ஆழ்கடலுக்குள் மனிதர்கள் செல்வார்கள்: கிரண் ரிஜ்ஜு


மேலும், இந்த சம்பவம் நடந்த அந்த நேரத்தில் வீடியோவில் இருந்த மருத்துவர் போதையில் இருந்தாரா, என்ன போதை பொருளை பயன்படுத்தினார் என்பது குறித்த எந்த விவரமும் இல்லை. மேலும், இதுவரை அந்த மருத்துவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 


இதுபோன்ற மற்றொரு விசித்திர சம்பவம் ஒன்று மகாராஷ்டிராவில் கடந்த சில நாள்கள் முன் நடந்தது. மீரா பயந்தர் மாநகராட்சியை சேர்ந்த முன்னாள் பாஜக நிர்வாகி ஒருவர் அரைநிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டது பலரின் கவனத்தை ஈர்த்தது. தானே-கோட்பந்தர் மாநில நெடுஞ்சாலையில் சென் கிராமத்தில் அவருடயை உணவகம் செயல்பட்டு வருகிறது. 



தற்போது அந்த சாலையின் நடுவே தடுப்பு அமைக்கப்பட்டு வரும் சூழலில், அவரின் கடையின் வாசலை அடைக்கும்படி அந்த தடுப்புகள் இருப்பதால் அதனை அகற்றக்கோரி அரை நிர்வாணமாக அதாவது மேல் சட்டை இல்லாமல் அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, வீடியோவில் பேசிய அவர் அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பாட்னாவிஸிற்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தார். உள்ளூர் எம்எல்ஏ தனது உணவக தொழிலை சீர்குலைக்கவே இதுபோன்று செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | மிஷன் 400: இலக்கை அடைய பிரதமர் மோடி தலைமையில் என்.டி.ஏ போடும் மாஸ்டர்பிளான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ