முதல்வர் வீட்டு அருகேயே வெள்ளப்பெருக்கு... அபாய அளவை தாண்டிய யமுனை நீர்மட்டம்
Delhi Floods: கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் கனமழை பெய்யவில்லை என்றாலும், ஹரியானாவின் தடுப்பணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் யமுனையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Delhi Floods: கடந்த சில நாள்களாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் பருவமழை பேயாட்டம் போட்டது. இமாச்சலப் பிரதேசம் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், அங்கும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டு வருகிறது.
யமுனையில் அதிகரிக்கும் நீர்மட்டம்
டெல்லியில் யமுனை ஆற்றில் இரவு நேரத்தில் நீர்மட்டம் மேலும் உயர்ந்து, வீடுகள் மற்றும் சாலைகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. இதனால், கரையோர பகுதிகளில் அவசர நடவடிக்கைகள் அரசு நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டது.
அபாய அளவை தாண்டி...
ஹரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணை தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் இன்று காலை 7 மணியளவில் யமுனையில் 208.46 மீட்டர் நீர்மட்டம் இருந்தது. தற்போதைய நீர்மட்டம் அபாயக் குறியை விட மூன்று மீட்டர் உயரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தில்லி முதல்வர் கூட்டிய அவசர கூட்டம்... யமுனையில் பெருகும் வெள்ளம்!
மத்திய அரசின் பதில்
அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதைத் தடுக்க, மத்திய அரசை வலியுறுத்தியது. ஆனால், அணையில் இருந்து உபரி நீரை திறந்துவிட வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தியது. அதன் வடக்கே அதிக கனமழை காரணமாக தடுப்பணை நிரம்பியுள்ளது.
முதல்வர் வீடு அருகேயே வெள்ளம்
டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ரிங் ரோடு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, மஜ்னு கா திலாவை காஷ்மீரி கேட் ஐஎஸ்பிடியுடன் இணைக்கும் பகுதி மூடப்பட்டுள்ளது. இந்த இடம் முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி சட்டசபையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் தான் உள்ளது.
மதியம் முதல் குறைய வாய்ப்பு
ஹரியானா அணையில் இருந்து நீர் திறப்பு பிற்பகல் 2 மணி முதல் குறையத் தொடங்கும் என மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழைய டெல்லி தொடர்ந்து இருப்பதால், நிகம்போத் காட் தகன மைதானத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் 12 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
மீட்பு நடவடிக்கை
கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் கனமழை பெய்யவில்லை என்றாலும், ஹரியானாவில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் யமுனையில் ஏற்பட்ட வெள்ளம் ஆற்றின் அருகே வசிக்கும் மக்களுக்கு பெரும் சிரமத்திற்கு வழிவகுத்தது. வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பலர் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளச் சூழலினால் ஆயிரக்கணக்கானோர் அவர்களின் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது யமுனையின் நீர்மட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த பருவமழை, டெல்லியில் பல தசாப்தங்களில் அதிக மழை பெய்துள்ளது.
பெங்களூருவில் ஜூலை 17-18 தேதிகளில் காங்கிரஸ் தலைமையில் கூடும் 24 எதிர் கட்சிகள்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ