Telangana Sonia Gandhi Speech: தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் அருகே துக்குகுடாவில் நடைபெற்ற தேர்தல் பொதுகூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் இரண்டாவது நாளான இன்று உரையாற்றிய சோனியா காந்தி, "நாங்கள் ஆறு உத்தரவாதங்களை அறிவிக்கிறோம், அவை ஒவ்வொன்றையும் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம். இந்த மாபெரும் மாநிலமான தெலுங்கானாவை அமைத்ததில், நானும் எனது தோழர்களும் சேர்ந்து ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பு கிடைத்தது.


அதிரடி 6 அறிவிப்புகள்


மகாலட்சுமி திட்டத்தின் கீழ் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்து 500 நிதியுதவி வழங்கப்படும். அதுமட்டுமின்றி, சமையல் எரிவாயு சிலிண்டரை 500 ரூபாய்க்கும், மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் ஆகிய வாக்குறுதிகளை தருகிறோம். தெலுங்கானா மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவே இந்த 6 உத்தரவாதங்களை அறிவிக்கிறோம். மேலும் அவை ஒவ்வொன்றையும் நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.



சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பணிபுரியும் காங்கிரஸ் ஆட்சி தெலுங்கானாவில் அமைய வேண்டும் என்பது எனது கனவு" என்றார். மேலும், காங்கிரஸை ஆதரிக்குமாறு சோனியா காந்தி, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


மேலும் படிக்க | நல்ல செய்தி விரைவில்: PPF வட்டி விகிதங்களை அதிகரிக்க திட்டமா? காத்திருக்கும் மக்கள்


பாஜகவை வீழ்த்த வேண்டும்


மேலும் அந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "ஒற்றுமை மற்றும் நிறுவன ஒழுக்கத்தை கட்சி தொண்டர்கள் கடைபிடிக்க வேண்டும். வரும் மாநில மற்றும் மக்களவைத் தேர்தல்களில் தனிப்பட்ட வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, எதிரிகளை முழு பலத்துடன் எதிர்கொள்ள வேண்டும். 


2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மத்தியில் பாஜகவை தோற்கடித்து, நாட்டில் மாற்று அரசாங்கத்தை அமைப்பதில் விடாமுயற்சியுடன் செயல்படுவதே கட்சியின் குறிக்கோளாக இருக்க வேண்டும்" என்றார். மோடி அரசின் மீதான கடுமையான தாக்குதலில், இது அரசியல் விளையாடுவதாகவும், அடிப்படை பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதாகவும் கார்கே குற்றம் சாட்டினார். 


மேலும் அவர்,"கட்சித் தலைவர்கள் இதுபோன்ற கவனச்சிதறல்களில் இருந்து விலகி உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். காங்கிரஸ் தலைவராக மகாத்மா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது 2024ஆம் ஆண்டில் நூற்றாண்டை அடைகிறது. 2024ஆம் ஆண்டில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே மகாத்மாவுக்கு மிகவும் பொருத்தமான அஞ்சலி.


தெலுங்கானாவில் இருந்து, புதிய பலத்துடனும், தெளிவான செய்தியுடனும் செல்வோம். தெலுங்கானாவில் மட்டுமின்றி, வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று, பாஜகவின் தவறான ஆட்சியால் மக்களை விடுவிப்பதற்காக, உறுதியான உறுதியுடன் இன்று ஹைதராபாத்தை விட்டு வெளியேறுகிறோம்," என்றார்.


பரவும் திராவிட மாடல்


மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பெண்களுக்கு மாதம் உரிமைத் தொகை ஆகியவை திமுக அரசு தமிழ்நாட்டில் செயல்படுத்திய திட்டங்களாகும். இதனை திராவிட மாடலின் சாட்சிகளாக திமுக கூறும் நிலையில், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தற்போது தெலங்கானாவிலும் கொண்டு வருவது திராவிட மாடல் பரவலாக்கப்படுவதையும், தமிழகம் முன்னுதாரணமாக திகழ்வதையும் குறிப்பதாக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  


மேலும் படிக்க | நிபா வைரஸ்: தொற்று வீதம் குறைவு.. ஆனால் ஆபத்து அதிகம், பீதியில் கேரளா!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ