யோகி ஆதித்யநாத் கான்வாய் கார் விபத்து... உ.பி.யில் பரபரப்பு - நடந்தது என்ன?
Uttar Pradesh CM Yogi Adityanath: உத்தர பிரேதச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கான்வாய் கார்களில் ஒன்று விபத்தில் சிக்கியதில் 9 பேருக்கு காயம் ஏற்பட்டது.
Uttar Pradesh CM Yogi Adityanath Convoy Accident: உத்தர பிரேதச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கான்வாய் கார்களில் ஒன்று விபத்தில் சிக்கியது. தலைநகர் லக்னோவில் இந்த விபத்து நிகழ்ந்தது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காயம் இல்லாமல் தப்பித்தார். இதில் 5 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
லக்னோவின் முக்கிய சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, முதலமைச்சரின் கான்வாயில் இடம்பெற்றிருந்த பாதுகாப்பு வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால், வாகனத்தை சட்டென திரும்பியதால் எதிரே வந்த காரின் மீது பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தேர்தல் முடிந்த உடன் இந்த காரியம்தான்... உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி தடலாடி
அகிலேஷ் யாதவ் கிண்டல்
இந்த சம்பவம் குறித்து உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத் மீது தனது X பக்கத்தில் கிண்டல் அடித்துள்ளார். அதாவது, சாலைகளில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து வரும் விலங்குகளின் பிரச்சினையை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், முதலமைச்சரே விபத்துக்குள்ளானார் என்ற ரீதியில் பதிவிட்டுள்ளார்.
"தெருவிலங்குகள் பிரச்னையை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், இன்று முதல்வர் சென்ற வாகனமே விபத்தில் சிக்கி, பலர் காயம் அடைந்தது வருத்தமும், கவலையும் அளிக்கிறது,'' என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விபத்து நடந்த சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், காயமடைந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். காயமடைந்தோர் சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவமனைக்கு காவல்துறை தலைமை இயக்குநர் பிரசாந்த் குமார், லக்னோ காவல்துறை ஆணையர் எஸ்பி ஷிரோத்கர் மற்றும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சஞ்சய் பிரசாத் ஆகியோர் வருகை தந்தனர்.
மேலும் படிக்க | காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி உறுதி! டெல்லியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ