பிரிவினைவாத தலைவர்கள் கைதாள் இன்று காஷ்மீரில் பந்த்
ஜம்மு - காஷ்மீரில் பிரிவினைவாத தலைவன், சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷா உட்பட, 7 பேரை, என்.ஐ.ஏ., அமைப்பு, கைது செய்துள்ளது. இதனை கண்டித்து இன்று ஜம்மு - காஷ்மீரில் முழு அடைப்பிற்கு விடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் பிரிவினைவாத தலைவன் சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷாவை உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து ஜம்முவில் நடந்து வரும் தீவிரவாத தாக்குதல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்படுவது குறித்தும், என்.ஐ.ஏ., விசாரணை நடத்தி வருகிறது.
இந்த அமைப்பு, அல்டாப் அகமது ஷா, கிலானியின் நெருங்கிய கூட்டாளிகளான, அயாஸ் அக்பர், பீர் சைபுல்லா உள்ளிட்ட ஏழு பேரை, கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள இவர்களின் வீடுகளில், இந்த மாத துவக்கத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது.
இந்நிலையில் பிரவினைவாத தலைவர்கள் ஒன்று ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தினர். தங்கள் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று காஷ்மீரில் பந்த் நடத்திட முடிவு செய்துள்ளனர்.