நமக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை தீர்க்க காவல்துறையை நாடுவது இயல்பான ஒன்று.  காவல் துரையின் பொது எண்ணான 100க்கு அழைத்து நாம் புகார் தெரிவிக்கலாம், அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.  அதேசமயம் காவலர்களுக்கு தேவையில்லாமல் தொந்தரவு கொடுத்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்பதை தெலங்கானாவில் ஒரு சம்பவம் நிரூபித்துள்ளது.  தனது மனைவி தனக்கு மட்டன் சமைத்து தரவில்லை என்பதற்காக அவரை போலீசில் புகாரளிக்கும் நோக்கில் விடாமல் 100 என்கிற எண்ணிற்கு அழைப்பு விடுத்தல் கடுப்பான போலீசார் அவரை கைது செய்து காவலில் வைத்துவிட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சொத்துக்காக மகன் குடும்பத்தை எரித்துக்கொன்ற தந்தை


நல்கொண்டா மாவட்டத்திலுள்ள செர்லா கௌராராம் என்கிற கிராமத்தை சேர்ந்தவர் நவீன்.  இவர் கடந்த ஹோலி பண்டிகை தினத்தன்று செய்த வினோதமான செயல் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.  பண்டிகை தினத்தில் நவீன் மது அருந்திவிட்டு அவரது மனைவியிடம் தனக்கு ஆட்டிறைச்சி சமைத்து தருமாறு கூறியுள்ளார், ஆனால் அவர் மனைவி அவரது வேண்டுதலை நிராகரித்துவிட்டார்.  இதனால் ஆத்திரமடைந்த நவீன் மனைவிக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்க எண்ணினார்.  அதனை தொடர்ந்து மது போதையில் இருந்த நவீன் காவல் துறைக்கு புகார் அளிக்க கொடுக்கப்பட்டுள்ள 100 என்கிற எண்ணிற்கு டயல் செய்து மனைவி தான் சொன்னபடி தனக்கு இறைச்சி சமைத்து தரவில்லை என்று கூறினார்.



இவரின் புகாரை போலீசார் கண்டுகொள்ளாமல் நிராகரித்துவிட்டனர், இருப்பினும் போதையில் இருந்த நவீன் மீண்டும் மீண்டும் போலீசிற்கு டயல் செய்துள்ளார்.  கிட்டத்தட்ட அவர் ஐந்து தடவைக்கு மேல் காவல் துறையினருக்கு டயல் செய்து கொண்டே இருந்திருக்கிறார்.  இதனால் பொறுமையிழந்த போலீசார் நவீனுக்கு தகுந்த பாடம் புகட்ட எண்ணினார், அதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து காவலில் வைத்தனர்.  சமைத்து தராத மனைவியை புகாரளிக்க எண்ணிய கணவரையே போலீஸ் கம்பி எண்ண வைத்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | கேரளாவில் கால்பந்து மைதான கேலரி சரிந்து விழுந்த வீடியோ வைரல்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR