தெலுங்கானா: ஹைதராபாத் மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்த பெண்மணி ஒருவர், தன் மகளின் வேண்டுகோளின் பேரில் இந்தியாவிற்கு மீண்டு வந்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹதாராபாத் மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்தவர் பர்ஹானா (பெயர் மாற்றப் பட்டுள்ளது). சவுதி அரேபியாவிற்கு பணிக்காக சென்றவர். அங்கு அவருக்கு பாலியல் ரீதியாகவும், உனர்வு ரீதியாகவம் கொடுமைகள் நிகழ்ந்துள்ளது.


இதனால் துயரமடைந்த அப்பெண்மனி, தெலுங்கானாவில் இருக்கும் தனது மகளிடன் தொடர்புகொண்டு தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரத்தினை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் கவனத்திற்கு அவர் கொண்டு சென்றுள்ளார். 


பின்னர் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட பெண்மனி ஜனவரி 25 நாள் இந்தியா திரும்பினார். தன் தாயை மீட்க உதவிய அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்மனி தெரிவிக்கையில் "அங்கு எனக்கு உணவு மறுக்கப்பட்டது, பாலியல் ரீதியாக என்னை கொடுமைப் படுத்தினர். தற்கொலைக்கு முற்பட்ட என்னை நம்பிக்கை இழக்க வேண்டாம் எனவும், எப்படியாவது என்னை மீட்க என் பிள்ளைகள் முயல்வார்கள் எனவும், நம்பிக்கை அளித்ததால் மிகுந்த மனஉலைச்சலுடன் போராடி வந்தேன். தற்போது என்னை இங்கு மீட்டு வந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.