புதுடெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் கோவிட் -19 தேசிய பணிக்குழு கூட்டு கண்காணிப்பு குழு, கொரோனாவிற்கான சிகிச்சை தொடர்பாக திருத்தப்பட்ட மருத்துவ வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் கோவிட் -19 நோயாளிக்கு சிகிச்சை அளிக்க ஐவர்மெக்டின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) மருந்துகளின் பயன்பாட்டை கைவிட முடிவு செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ரெம்டெசிவிர் (Remdesivir) மற்றும் டோசிலிசுமாப் (Tocilizumab) ஆகியவற்றை பயன்படுத்தலான என புதிய வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர பொதுவான வழிகாட்டுதல்களான மாஸ்குகளை அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் சானிடைஸர் பயன்படுத்துதல் ஆகியவை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


அறிகுறி தோன்றிய 10 நாட்களுக்குள், ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படும் அல்லது மிதமான அல்லது கடுமையான COVID-19 நோயாளிகளுக்கு ரெமெடிசிவிர் போன்ற பிற மருந்துகளின் மிதமான பயன்பாட்டை வழிகாட்டுதல் அறிவுறுத்துகிறது. டோசிலிசுமாப் கடுமையான கோவிட் -19 நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். கடுமையான நோய் அல்லது ஐசியு சிகிச்சை தேவைப்படுவர்களுக்கு பயன்படுத்தலாம் என வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.


அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) ஒரு ஆய்வில், ஐவர்மெக்டின் என்ற ஆன்டிபராசிடிக் மருந்து கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பாக செயல்படவில்லை என்று தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நோய்த்தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 157 நோயாளிகளிடம் நடத்தப்பட பரிசோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது.


லேசானா கொரோனா தொற்றுக்கு, சமூக இடவெளி, மாஸ்க பயன்படுத்துதல் மற்றும் கடுமையான சுகாதாரத்தை பின்பற்றுதல் ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது.