பனஸ்கந்தா: ஏழை மக்களின் வளர்ச்சிக்காக ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம் தீசா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசுகையில், நவம்பர் 8-ம் தேதி அன்று பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன் அனைவரும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு பற்றியே கவலை இருந்தது. தற்போது 50, 100 ரூபாய் நோட்டுகளுக்கு நாட்டில் மதிப்பு அதிகரித்துள்ளது.


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த பிறகு, கருப்பு பணம், ஊழல் மற்றும் கள்ள பணம் வைத்து இருபவர்களை பிடி பட்டு வருகின்றனர்.


ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதன் மூலம் தீவிரவாதத்தின் முதுகெலும்பு உடைக்கப் பட்டுள்ளது.


பார்லிமென்ட் செயல்பட அவர்கள் அனுமதிப்பதில்லை. பார்லிமென்ட் முடக்கப்படுவதற்கு ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். பார்லிமென்டில் பேச என்னை எதிர்க்கட்சிகள் அனுமதிப்பதில்லை. அதனால் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன்.


நாட்டை மாற்றிக் காட்ட 50 நாட்கள் வேண்டும் என்று கேட்டு இருந்தேன். 50 நாட்கள் கழித்துப் பாருங்கள் எந்தளவிற்கு மாற்றங்கள் வந்திருக்கும் என்று. நாட்டில் இருக்கும் ஊழலை ஒழிக்க எடுத்திருக்கும் மிகப் பெரிய நடவடிக்கை இது. 


டிஜிட்டல் முறையில் பணம் பேமன்ட் செய்ய நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.


கருப்புப்பணம் ஏழை- எளிய மக்களை காயப்படுத்திக் கொண்டிருந்தது. அதற்கும் தீர்வு ஏற்படத்தொடங்கியுள்ளது.


இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.