புதுடெல்லி: அலோபதி குறித்து கருத்து தெரிவித்த சர்ச்சையில் சிக்கிய யோகா குரு பாபா ராம்தேவ் (Baba Ramdev) தான் இப்போது  கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயார் என கூறியுள்ளார். மேலும், மற்றவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும், முன்பு தனக்கு தடுப்பூசி தேவையில்லை என்ற, பாபா ராம்தேவ் ஏன் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடிவு செய்தார் என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக பாபா ராம்தேவ் யோகா (Yoga) மற்றும் ஆயுர்வேதம் (Ayurved) என்ற டபிள் டோஸ் தனக்கு உள்ளதால்,  தனக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை என கூறியிருந்தார். பாபா ராம்தேவ், முன்னதாக, கொரோனா வைரஸின் (Corona Virus) எத்தனை வகைகள் வந்தாலும், அதன் தொற்று என்னை பாதிக்காது, ஏனெனில் யோகா  என்னை காப்பாற்றும் என்றார். கொரோனாவை வெல்ல, மக்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டும், இதன் மூலம் தொற்றுநோயைத் தவிர்க்கலாம் என்று பாபா ராம்தேவ் கூறியிருந்தார்.


யோகா நோய்களுக்கு எதிரான கேடயமாக செயல்படுகிறது எனக் கூறிய பாபா ராம்தேவ் மக்களை யோகா மற்றும் ஆயுர்வேதத்தை கடைபிடிக்க வேண்டும் என  அறிவுறுத்தினார். யோகா நோய்களுக்கு எதிரான கேடயமாக செயல்படுவதோடு, கொரோனாவினால் ஏற்படும் சிக்கல்களையும் தடுக்கிறது என்றும் அவர் கூறினார்.


ALSO READ | கண்ணாமூச்சி காட்டும் காட்டும் கொரோனா; குறையும் தொற்று; எகிறும் இறப்பு எண்ணிக்கை


மருத்துவர்கள் தேவ தூதர்கள்


மருந்து மாஃபியா குறித்து கருத்து தெரிவித்த,  பாபா ராம்தேவ், 'எனக்கு அலோபதி மருத்துவர்கள் மீது எந்த பகையும் இல்லை, நல்ல மருத்துவர்கள் அனைவரும் இந்த பூமிக்கு கடவுள் அனுப்பிய தூதர்கள். மருத்துவர்களிடம் நான் மோதவில்லை, மருத்துவ மாபியாக்களை தான் நான் எதிர்க்கிறேன் எனக் கூறினார் .


அலோபதி மற்றும் அறுவை சிகிச்சை அவசரகாலத்தில் சிறந்தது


பாபா ராம்தேவ் மீண்டும் அலோபதி குறித்து ஒரு அறிக்கையை அளித்த பாபா ராம்தேவ், 'அவசரகால சிகிச்சைக்கு அலோபதி மற்றும் அறுவை சிகிச்சை சிறந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மருந்து சிகிச்சை என்ற பெயரில் யாரும் கொள்ளை அடிக்கக் கூடாது, மக்கள் மருந்து மாஃபியாக்களிடமிருந்து விடுவிக்க வேண்டும்.


ALSO READ | வருமான வரியை தாக்கலுக்கு புதிய இணையதளம்; முக்கிய அம்சங்கள் பிற விபரம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR