மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே பயனளிப்பதாக இருக்கும்; இரு மாநிலங்களும் பயன்படுத்த முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம் என கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இதற்கிடையில் மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காவிரி குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசு, அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிராகவும் தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை காவிரியாற்றில் மேகதாது என்ற இடத்தில் அணையை கட்ட ஆய்வை கர்நாடக அரசு தொடங்கியது. இதை தொடர்ந்து, கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்; ‘தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. நாங்கள் தமிழகத்துடன் சண்டை போட விரும்பவில்லை. நாங்கள் சகோதர மாநிலம்.


மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே பயனளிப்பதாக இருக்கும். இரு மாநிலங்களும் பயன்படுத்த முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம். கர்நாடக மக்களுக்கு குடிநீர் தரவேண்டியது எங்கள் கடமை. எனவே அணை கட்டுவதில் உறுதியாக உள்ளோம்.


மொத்த கர்நாடக மக்களும் ஆதரவாக இருப்பார்கள். கர்நாடகாவில் 6 கிராம மக்கள் எதிர்ப்பு என்பதில் உண்மையில்லை. திட்டம் வகுத்த பின் தமிழக அரசு உணர்ந்து கொள்ளும். மேகதாது அணையால் 67 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும்’ என்றார்.