இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடந்தது. பெங்களூருவில் நடந்த 2வது கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டது.  மும்பையில் நடைபெறும் 3வது ஆலோசனை கூட்டத்திற்கான அட்டவணை ஆகஸ்ட் 31-ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. செப்டம்பர் 1-ம் தேதி காலை 10.30 மணிக்கு இந்தியா கூட்டணியின் லோகோ வெளியிடப்படும். செப்டம்பர் 1-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு இந்தியா கூட்டணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இக்கூட்டத்தை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னின்று நடத்துகிறார். சிவசேனா உடைந்த பிறகு உத்தவ் தாக்கரே தன்னை தேசிய அளவில் காட்டிக்கொள்ளும் விதமாக இக்கூட்டத்தை தானே முன்னின்று நடத்துகிறார். அவருடன் அவரின் மகன் ஆதித்ய தாக்கரேயும் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு உத்தவ் தாக்கரே நாளை இரவு விருந்து கொடுத்து கெளரவிக்கிறார். இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கும் மும்பை விமான நிலையம் அருகே உள்ள சாந்தா குரூஸ் நட்சத்திர ஹோட்டலில் இக்கூட்டத்திற்கு வரும் தலைவர்களுக்காக, 170 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | சந்திரனில் சல்பர், ஆக்ஸிஜன்... பிர்கயான் ரோவரின் வேட்டை தொடரும்!


இக்கூட்டத்தில் 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இது தவிர பகுஜன் சமாஜ், அகாலி தளம் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து இரு தரப்பில் இருந்தும் உறுதி செய்யப்படவில்லை. வடகிழக்கு மாநிலத்தில் இருந்தும் சில கட்சிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் தொகுதிகளை பங்கிட்டுக்கொள்வது குறித்தும், ஒருங்கிணைப்புக்கமிட்டி அமைப்பது குறித்தும் பிரதானமாக விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.


ஜூன் மற்றும் ஜூலை நடந்த இரண்டு கூட்டங்களும் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்த மாநிலத்தில் நடைபெற்றது. ஆனால் மகாராஷ்டிராவில் இப்போது பா.ஜ.க. ஆதரவு சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே) அரசு ஆட்சியில் இருக்கிறது. எனவே இக்கூட்டத்தை சிறப்பாக நடத்தி தனது செல்வாக்கை நிரூபித்துக்காட்டவேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே தீவிரமாக இருக்கிறார்.


எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு போட்டியாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மாநில எம்.பி.க்களை அழைத்து மக்களைவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். இரண்டு நாள்கள் நடக்கும் கூட்டத்தில் இரண்டு துணை முதல்வர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.


மேலும் படிக்க | Aditya L1: L1 என்றால் என்ன? சூரியனை ஆதித்யா எங்கிருந்து ஆராயும்? பதில்கள் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ