மும்பை: நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் மும்பை தலைநகரில், மன உளைச்சலுக்கு ஆளான ஒரு பெண், லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும். இல்லையென்றால், உங்களை கொன்றுவிடுவேன் என பெற்றோர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார். இதுகுறித்து காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அதனையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில், அதிர்ச்சி அளிக்கும் வகையில் உண்மை என்னவென்று தெரியவந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது மைனர் பெண்ணான அவர் மீது பெற்றோர்கள் சரியாக கவனம் செலுத்துவது இல்லை. அவர்களின் அன்பு கிடைக்காத பட்சத்தில், அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று தான் இதைச் செய்துள்ளார். மின்னஞ்சல் மூலம் அவர்களை மிரட்டி உள்ளார். 


அந்த பெண்ணின் தந்தை வங்கியில் பணிபுரிகிறார். அவரது 12 வயது மகள், வீட்டில் இருக்கும் மொபைல் மூலம் மின்னஞ்சல்களையும் அனுப்பியதாக தனது பெற்றோர் முன்னிலையில் ஒப்புக்கொண்டார்.


காவல்துறை விசாரணையைத் தொடங்கியது:
கடந்த  ஜூன் 21 ம் தேதி வங்கியாளர் போரிவாலி காவல் நிலையத்தை அணுகி புகார் தெரிவித்தார். மேலும் நான் வங்கியில் பணிபுரியவதால், அதை பயன்படுத்தி, மனைவியை மிரட்டி பணம் பறிக்க தான் மிரட்டல் வந்துள்ளது என சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.


அதன் பிறகு இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 387 (ஒரு நபரைக் கொல்வது அல்லது அவருக்கு தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்தல்) கீழ் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டது. 


அதன் பின்னர் குற்றப்பிரிவின் ஒன்பதாவது பிரிவு தனது விசாரணையைத் தொடங்கியது. அதாவது மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு (Crime Branch) இந்த வழக்கை கையில் எடுத்தது விசாரணை மேற்கொண்டது. 


அந்த விசாரணையில் வங்கியாளரின் மொபைல் தொலைபேசியிலிருந்து மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாகவும், மிரட்டல் விடப்பட்ட மூன்று மின்னஞ்சல்களின் முகவரி கூட ஒரே மாதிரியாக இருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.


மின்னஞ்சல் மூலம் மிரட்டியது என்ன? 
மின்னஞ்சல் அனுப்பியவர் தன்னை ஒரு சீன குடிமகன் என்று வர்ணித்ததாகவும், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தனக்கு தெரியும் என்றும், ரூ .1 லட்சம் பணம் வேண்டும் என அனுப்பியுள்ளார். இந்த மின்னஞ்சல் வெவ்வேறு ஐடிகளிலிருந்து அனுப்பப்பட்டது. "ஆனால் படிப்படியாக மேட்கும் தொகை ரூ .1.2 கோடியாக அதிகரித்து, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், உங்கள் மனைவி மற்றும் இரண்டு மகள்களையும் கொலை செய்வதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் அனுப்பி உள்ளார். 


அன்பு மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மிரட்டல்:
போலீஸ் குழுவைப் பொறுத்தவரை, "தனது பெற்றோர் தன்னைப் பற்றி கவலைப்படுவதில்லை, ஆனால் தனது நான்கு வயது சகோதரியை அதிகம் நேசிக்கிறார்கள் என்று தான் உணர்கிறேன்" என்று 12 வயது சிறுமி கூறினார். "மீண்டும் மீண்டும் பெற்றோர்களை பழிவாங்க இதுபோன்ற மெயிலை அனுப்புவது சரியாக இருக்கும் என்று நினைத்து, சில மெயில்கலை அனுப்பி உள்ளார். சிறுமியின் மீது அடுத்த நடவடிக்கை எடுக்க பெற்றோர் மறுத்துவிட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.