தான் பிரதமராக இருந்த போது செய்தியாளர்களை சந்தித்துப் பேச தயங்கியதே இல்லை என மன்மோகன்சிங் மோடியை மறைமுகமாக தாக்கியுள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய "Changing India" என்ற தலைப்பிலான சுயசரிதை புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மன்மோகன்சிங், காங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமராக இருந்த தன்னை ‘மவுன மன்மோகன்சிங்’ என்று கிண்டல் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.   


கடந்த ஏப்ரலில் மன்மோகன் சிங் அளித்த பேட்டியின் போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நான் பிரதமராக இருக்கும் போது பல்வேறு விஷயங்களில் முன்கூட்டியே கருத்து கூறாமல் இருந்ததற்காக என்னை மவுன மன்மோகன் சிங் என்று பாஜகவினர் அழைத்தார்கள். இதே பெயரோடு தான் நான் ஆட்சி முழுவதும் வாழ்ந்தேன் என்றார்.


பிரதமர் பதவிக்கு மட்டுமன்றி, கடந்த 1991 ஆம் ஆண்டில் நிதியமைச்சராகவும் திடீரென வந்ததாக தெரிவித்தார். நிதியமைச்சராக பதவியேற்றதைத் தொடர்ந்து, நாட்டில் நிலவிய நெருக்கடியை சமாளித்து மிகப்பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தியதாக பெருமிதம் தெரிவித்தார். செய்தியாளர்களை பார்த்து பயப்படுவதற்கு நான் ஒன்றும் பிரதமர் இல்லை. நான் பிரதமராக பதவி வகித்தபோது, செய்தியாளர்களிடம் பேச பயந்ததில்லை. நான் பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளேன். ஒவ்வொரு முறை வெளிநாடு சென்று விட்டு திரும்பிய பிறகும் செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.


தேவை ஏற்படும் போது நான் பேசி உள்ளேன். எனது பல செய்தியாளர் சந்திப்புக்கள் குறித்து இந்த புத்தகத்தில் விரிவாக விளக்கி உள்ளேன். நான் பிரதமராக இருந்த போது சாதித்தவைகள் குறித்து நான் பெருமைபட்டுக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் அந்த தருணங்கள் குறித்து எனது புத்தகங்களில் விளக்கி உள்ளேன் என்றார். இவ்வாறு அவர் பேசி உள்ளார்.