முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் போல், தாம் கொலை செய்யப்படக் கூடும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவைக்கு 7 கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்டத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 8 தொகுதிகளில் ஞாயிற்றுகிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், இமாச்சல் பிரதேசத்தில் 4, சண்டிகர் தொகுதி என 59 தொகுதிகளுக்கும் நாளை (19 ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


கடைசி கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சித்தலைவர்கள் அனிவரும் தற்போது இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் போல், தாம் கொலை செய்யப்படக் கூடும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். 


டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னைக் கொலை செய்வதற்கு தனது எதிரிகள் சதித் திட்டம் தீட்டி இருப்பதாகத் தெரிவித்தார். டெல்லி மாநில காவல்துறையும், தனது தனிப் பாதுகாவலர்களும் தன்னைப் பற்றிய தகவல்களை மத்திய அரசுக்கு தெரிவிப்பதாகக் கூறிய கெஜ்ரிவால், இந்திரா காந்தியைப் போல் தனி பாதுகாவலர் மூலம் தாமும் ஒருநாள் கொல்லப்படக் கூடும் என்று குற்றம்சாட்டினார்.


இரண்டே நிமிடத்தில் தனது உயிர் போய் விடும் எனக் குறிப்பிட்ட அவர், குறிப்பிட்ட கட்சியொன்று, நிச்சயம் தன்னைக் கொலை செய்யும் என்றும் புகார் கூறினார்.