இனி தான் தனது 50 வயதில் தான் சபரிமலை வருவேன்,” என சபரிமலைக்கு பதாகையுடன் வந்த தமிழக சிறுமி...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்துஇம்மாதம் 17 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கிற்காக திறக்கப்பட்டது. 


உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, கோவிலுக்குள் செல்ல இரண்டு நாட்களாக பெண்கள் முயன்று வருகின்றார்கள். ஆனால், அவர்கள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், சபரிமலையில் தொடர்ந்து பதட்டம் நிலவிவரும் நிலையில் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 


இதையடுத்து, சபரிமலையில் இன்று அதிகாலை மதுரையை சேர்ந்த ஜனனி என்ற 9 வயது சிறுமி இருமுடி கட்டி வந்து சுவாமி தரிசனம் செய்தார். கருப்பு ஆடையில் தமது தந்தையுடன் வந்த ஜனனி, கையில் வைத்திருந்த பதாகையில் பதாகையுடன் வந்தது அனைவரையும் கவர்ந்துள்ளது. அதில், “என்னுடைய 50 வயதிற்கு பின்னர்தான் சபரிமலைக்கு இனி நான் வருவேன்,” என வாசகம் தாங்கிய பதாகையை வைத்திருந்தார். அவருடைய தந்தை பேசுகையில், “எங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எல்லாம் எங்களுக்கு தெரியாது. என்னுடைய மகளுக்கு இப்போது 10 வயது ஆகிறது, இனி 50 வயது வரையில் காத்திருப்பார். பின்னர் வந்து அய்யப்பனை வந்து தரிசனம் செய்வாள்,” என கூறியுள்ளார்.