ICSE, ISC: 10, 12 ஆம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன: ரிசல்டை பார்ப்பது எப்படி?
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE), ஐ.சி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.எஸ்.சி 12 ஆம் வகுப்பு முடிவுகளை இன்று அறிவித்துள்ளது.
புதுடில்லி: இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE), ஐ.சி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.எஸ்.சி 12 ஆம் வகுப்பு முடிவுகளை இன்று அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் ஐசிஎஸ்இ-க்கு 99.98% ஆகவும் ஐஎஸ்சி-க்கு 99.76% ஆகவும் உள்ளது.
டெல்லி தேசிய தலைநகர் மண்டலம் (NCR) ஐ.சி.எஸ்.இ முடிவுகளில் 100% தேர்ச்சி சதவீதத்தை பதிவு செய்துள்ளது. ஐ.எஸ்.சி வகுப்பு 12 முடிவுகளில், டெல்லியில் 99.93% பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டில், 2,909 மாணவர்களும் 2,554 மாணவிகளும் ஐ.சி.எஸ்.இ தேர்வுகளை எழுதினர். ஐ.எஸ்.சி தேர்வுகளை இந்த ஆண்டு 1,418 மாணவர்களும் 1,393 மாணவிகளும் எழுதினர்.
கவுன்சிலின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cisce.org அல்லது results.cisce.org -ல் மாணவர்கள் இந்த முடிவுகளை (Exam Results) தெரிந்துகொள்ளலாம்.
இந்த ஆண்டு தகுதி பட்டியலை (Merit List) வெளியிட வேண்டாம் என வாரியம் முடிவு செய்துள்ளது.
COVID-19 இன் ஆக்கிரோஷமான இரண்டாவது அலையைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) ரத்து செய்தது.
ALSO READ: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓபன் ஸ்கூலிங் 10 மற்றும் 12 வது தேர்வு முடிவுகள் வெளியானது!
வாரியம் தீர்மானித்த மாற்று மதிப்பீட்டுக் கொள்கையின் அடிப்படையில் முடிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
வாரியத்தின் தலைமை நிர்வாகியும் செயலாளருமான ஜெர்ரி அராத்தூன், முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி-ல் ரீசெக்கிங் செய்ய விடைத்தாள்கள் இந்த முறை கிடைக்காது என்று கூறினார். ஏனெனில் இந்த ஆண்டு மாணவர்களுக்கு "கணக்கிடப்பட்ட மதிப்பெண்கள்" வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், கணக்கீட்டு பிழைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை சரிசெய்ய ஒரு வழிமுறை இருக்கும்.
"மாணவர்களுக்கு மதிப்பெண்களின் கணக்கீடு குறித்து ஆட்சேபனைகள் இருந்தால், அவர்கள் அதைப் பற்றி பள்ளிக்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்கலாம்.” என்று அறிவிப்பில் குறிப்பிடட்ப்பட்டுள்ளது.
"முடிவை மாற்ற வேண்டியிருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைவருக்கு CISCE அறிவிக்கும். இந்த வழிமுறை கணக்கீட்டு பிழைகளை சரிசெய்ய மட்டுமே" என்று அவர் மேலும் கூறினார்.
CISCE ISC 12 வது 2021 க்கான பிராந்திய வாரியன தேர்ச்சி சதவீதம் பின்வருமாறு:
வடக்கு (99.75 சதவீதம்)
கிழக்கு (99.70 சதவீதம்)
மேற்கு (99.91 சதவீதம்)
தெற்கு (99.91 சதவீதம்)
வெளிநாடுகள் (100.00 சதவீதம்)
ஐசிஎஸ்இ 10 வது முடிவு 2021 பிராந்திய வாரியான தேர்ச்சி சதவீதம்:
வடக்கு: 99.97%
கிழக்கு: 99.98%
மேற்கு: 99.99%
தெற்கு: 100%
வெளிநாடுகள்: 100%
ALSO READ: CBSE 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை இறுதி செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR