இரட்டையர்கள்…. தாயின் கருவறையில் இருக்கும்போதே துணையுடன் இருக்கும் அதிர்ஷ்டசாலிகள். பூமிக்கு துணையுடன் வரும் பேர் பெற்றவர்கள். ஒத்த உருவ அமைப்பு, பழக்கவழக்கங்கள் என இவர்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், நாம் இங்கு காண இருக்கும் ஒரு விஷயம் நம்மை கண்டிப்பாக வியப்பில் ஆழ்த்தும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரட்டையர்களான (Twins) மான்சி மற்றும் மன்யா (Mansi and Manya) பார்க்க ஒரே மாதிரி இருப்பார்கள். இதில் என்ன அதிசயம்? இரட்டையர்கள் தானே என கேட்கிறீர்களா? அதிசயம் இனிதான் வரப்போகிறது. இவர்களது பொதுத் தேர்வுகளின் மதிப்பெண்களும் ஒரே மாதிரி உள்ளன. இவர்கள் இருவரும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் (Class 12 Board Exams) ஒரே மாதிரியான மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை CBSE  திங்களன்று அறிவித்தது. நோய்டாவில் (Noida) வசிக்கும் இந்த இருவரும் 95.8 என்ற ஒரே மதிப்பெண் சதவீதத்தைப் பெற்றுள்ளது மட்டுமல்லாமல், அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இருவரும் பொறியியல் படிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள JEE மெயின்ஸுக்கு (JEE Mains) ஆஜராக காத்திருக்கிறார்கள்.


ஒத்த பழக்கவழக்கங்களைக் கொண்ட சகோதரிகள், தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்ததாகவும், ஆனால், ஒரே மாதிரியான மதிப்பெண்களைப் பெறுவோம் என்று கற்பனை கூட செய்யவில்லை என்றும் கூறினர்.


"எல்லோரும் எங்களது ஒரே மாதிரியான தோற்றத்திற்காக எங்களை நினைவில் வைத்திருக்கிறார்கள். எங்களது பெயர்கள் மட்டுமே எங்களை வேறுபடுத்துகிறன. நாங்கள் நன்றாக மதிப்பெண் பெறுவதில் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் ஒரே மதிப்பெண்களைப் பெறுவோம் என்று நம்பவில்லை" என்று மான்சி ஊடகங்களிடம் கூறினார்.


ALSO READ: 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 50 வயது மேகாலயா பெண்.. சாதித்ததுஎன்ன ?


உற்சாகத்தைப் பகிர்ந்துகொண்ட மான்யா, "ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒரே மாதிரியான மதிப்பெண்களைப் பெறுவதைப் பற்றி நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு படித்தேன். ஆனால் அது ஒரு தற்செயல் நிகழ்வு என்று நான் நினைத்தேன். நாங்களும் அதேபோல் ஒரே  மதிப்பெண்களை பெற்றோம் என்று இன்னும் நம்ப முடியவில்லை." என்று தெரித்தார்.


இரண்டு சகோதரிகளுக்கிடையே படிப்பில் எப்போதும் போட்டி இருந்ததாகவும், ஆனால், இதற்கு முன்னர் இப்படி இருவரும் ஒரே மதிப்பெண்களைப் பெற்றதில்லை என்றும் அவர்கள் கூறினார். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆஸ்டர் பப்ளிக் பள்ளிக்குச் (Aster Publc School) சென்ற சகோதரிகள், ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியலில் 98 மதிப்பெண்கள் பெற்றனர். மேலும் இயற்பியல், வேதியியல் மற்றும் உடற்கல்வி ஆகியவற்றில் தலா 95 மதிப்பெண்கள் பெற்றனர். ஒன்பது நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர்கள் இருவருக்கும் விதவிதமான உணவு வகைகளிலும் பூப்பந்து விளையாட்டிலும் ஆர்வம் உள்ளது.


ALSO READ: சபாஷ் மீனா: மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி 85% மதிப்பெண் எடுத்து சாதனை!!