பாகிஸ்தானுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டி கூறியதாவது:- 2003-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்துமீறி வருகிறது. பாகிஸ்தான் தனது நாட்டில் பயங்கரவா திகளுக்கு பயிற்சி அளித்து அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வருகிறது. பயங்கரவாதிகளை அனுப்பி இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதையும் எப்போதும் ஏற்க முடியாது. நமக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் இதுவரை இந்தியா பொறுமையாக இருந்தது. தூதரக ரீதியில் சில முயற்சிகளை நாம் மேற்கொண்டோம். ஆனால் தற்போது நேரம் மாறி விட்டது.


தற்போது இந்தியாவின் கொள்கை தெளிவாக உள்ளது. இந்தியா நல்ல துடிப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதி களை அனுப்பி இந்திய வீரர்களை கொன்றால், இதற்கு பாகிஸ்தான் அதிகவிலை கொடுக்க வேண்டியிருக்கும். தற்போது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு குழப்பம் அந்நா ட்டிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 


நாம் யூரியிலும், பதன்கோட்டிலும் விலை கொடுத்துள்ளோம். ஆனால், இது ஒரு தரப்பில் மட்டுமே விலை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று பாகிஸ்தான் அதிக விலை கொடுத்து வருகிறது. அரசு, ஜனநாயகம் மற்றும் ராணுவத்திற்கு இடையேயான மோதல் காரணமாக பாகிஸ்தானில் சிக்கலான சூழ்நிலை உருவாகி உள்ளது என தனது பேட்டியில் கூறியுள்ளார்.