சிங்கிளாக இருங்கள் அப்போதான் அது நடக்கும் - அமைச்சரின் யோசனை
சிங்கிளாக இருந்தால் மக்கள் தொகை கட்டுப்படும் என நாகாலாந்து அமைச்சர் கூறியிருக்கிறார்.
உலக மக்கள்தொகை ஆண்டுக்கு 1.10 விழுக்காடு அதிகரிக்கிறது. ஆண்டுக்கு 83 மில்லியன் மக்கள் அதிகரித்து வருகின்றனர். மேலும், உலக மக்கள் தொகையானது 2030ஆம் ஆண்டு 8.6 பில்லியனாகவும், 2050ஆம் ஆண்டு 9.8 பில்லியனாகவும், 2100ல் 11.2 பில்லியனாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஒரு நாளுக்கு 4 பேர் பிறக்கிறார்கள். ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின்படி 1989ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் நிறுவப்பட்டது.
அதன்படி இன்றைய நாள் உலக மக்கள் தொகை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நல பிரச்னைகள், குடும்பக் கட்டுப்பாடு, மனித உரிமைகள், பாலின சமத்துவம் உள்ளிட்டவைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | டெலிவரி பாயை வலை வீசி தேடும் ‘ஸ்விக்கி’ : தகவல் கொடுத்தால் ரூ. 5,000 பரிசு!
இந்நிலையில், மக்கள் தொகையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா தெரிவித்திருக்கும் கருத்து வைரலாகியுள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலக மக்கள் தொகை தினத்தையொட்டி மக்கள் தொகை பெருக்கத்தின் பிரச்னைகளில் விழிப்புணர்வோடு இருப்போம். இல்லையெனில் என்னைபோல் சிங்கிளாக இருங்கள்.
மேலும் படிக்க | லாலு பிரசாத் யாதவுக்கு இத்தனை நோய்களா? எய்ம்ஸில் தொடங்கியது சிகிச்சை!
அப்போது நாம் ஒன்றாக சிறப்பான எதிர்காலத்திற்கு பங்களிக்கலாம். எனவே இன்றே சிங்கிள் இயக்கத்தில் சேர்ந்துவிடுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR