ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, காக்கிநாடாவில் தனது வாகனத்தைத் தடுத்து நிறுத்திய பாரதீய ஜனதா கட்சியின் (BJP) தலைவர்களை அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பாக காகிநாடா மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றார். அப்போது அவரது வாகனத்தை ஆந்திர பாஜக தலைவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு தெரிவித்த விமர்சனங்கள் தொடர்பாகவும் கண்டன குரல்களை எழுப்பியுள்ளனர். 



இதையடுத்து பாஜக மாவட்டத் தலைவர் உட்பட அந்த மறியலில் ஈடுபட்டவர்களை ஆந்திர போலீஸார் கைது செய்தனர். அப்போது சந்திரபாபு நாயுடு பேசுகையில், ஆந்திர மாநிலத்துக்கு பிரதமர் மோடி துரோகம் செய்துள்ளார். 


என்னிடம் மோத நினைத்தால் உங்கள் கதை முடிந்துவிடும். பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை வெளியே சென்று சொன்னால் மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள். எனவே ஜாக்கிரதையாக இருங்கள். ஆந்திராவில் மோடியை ஆதரிப்பதற்கு பாஜக-வினர் வெட்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.