புது டெல்லி: அடுத்த மூன்று நாட்களுக்கு பல மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி -IMD) வியாழக்கிழமை (செப்டம்பர் 09) கணித்துள்ளது. ஐஎம்டி தனது சமீபத்திய அறிக்கையின்படி, குஜராத், ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், அரியானா, இமாச்சல் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், மேற்கு மற்றும் வட மேற்கு திசை நோக்கி நகர்வதால், மேற்கு கடற்கரையோரத்தில் மற்றும் வட மாநிலங்களில் பரவலாக மழை பெய்யும். மேலும் வடக்கு கொங்கன், தெற்கு குஜராத் பிராந்தியம், ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் செப்டம்பர் 12 முதல் 13 வரை, கனமழை முதல் மிக கனமழையு பெய்ய வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


செப்டம்பர் 9 முதல் 12 வரை குஜராத், தென்கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் பல பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை முதல் மிக கனமழையுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் மேலும் தெரிவித்துள்ளது.


செப்டம்பர் 10 முதல் 11 வரை தெற்கு ஹரியானா, தென்மேற்கு உத்திரபிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


ALSO READ | Viral Video: இதுபோன்ற செயல்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்


உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 3 நாட்களில் ஜம்மு பகுதிகளிலும் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்யும்.


டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் லேசான முதல் தீவிர மழை பெய்யும் என்று ஐஎம்டி கணித்துள்ளது. 


தென் மாநிலங்களில் 11 ஆம் தேதி வரை மழைப்பொழிவு குறைவாக இருக்கும். அனல் ஆனால் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும். செப்டம்பர் 13 ஆம் தேதி கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.


மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் வருகிற 13 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. 


ALSO READ | தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR