தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் சனிக்கிழமையன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2021, 05:56 PM IST
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் title=

வங்கக்கடலில் சனிக்கிழமையன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால், மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. 

தமிழ்நாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் வருகிற 13ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என  சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. 

நீலகிரி, , தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர்திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்படுகிறது. மேலும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்  என்ற அளவிலும்,  குறைந்தபட்ச வெப்பநிலை 20  டிகிரி செல்சியஸ்  என்ற அளவிலும் இருக்கும். 

ALSO READ | செப்டம்பர் 6 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்

தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள் , அந்தமான் கடல் பகுதிகளில், இன்று முதல் வருகின்ற 13ஆம் தேதி வரை  பலத்த காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 12ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மேற்கூறிய பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என  எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 38.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரையில் 37.6 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. நெல்லையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பமும், சென்னையில் 35 டிகிரி செல்சியஸ்  என்ற அளவிலும் வெப்பம் பதிவாகியுள்ளது.

ALSO READ | இடா புயல் எதிரொலி - சாலைகளில் கரை புரண்டோடும் வெள்ளம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News