மும்பை: மும்பை (Mumbai) மற்றும் தானே (Thane) உள்ளிட்ட கொங்கன் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 15, 2020) கனமழை (Heavy Rainfall) பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. ராடார், செயற்கைக்கோள் படங்கள், கொங்கன் கடற்கரையில் தீவிரமான மேகச் செயல்பாட்டைக் காட்டுகின்றன. குறிப்பாக மும்பை மற்றும் தானேவில் மிக அதிக அளவிலான மழை இருக்கும் என்று தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவின் (Maharashtra) மும்பை, தானே, ராய்கட் மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு மும்பையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை (Orange alert) விடுத்துள்ளது. வியாழக்கிழமை வரை அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்ட IMD, அங்கு அதிக முதல் மிக அதிக அளவிலான மழை பெய்யும் என கணித்துள்ளது.


அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த பகுதிகளில் கனமழை முதல் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.


ALSO READ: அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு: IMD


மும்பையின் கொலாபா பகுதியில், இன்று காலை 25 மிமீ மழை பதிவாகியுள்ளது. பால்கரில், சுமார் 124 மிமீ மழை பதிவாகியுள்ளது, முழு மகாராஷ்டிராவிலும் 6 மிமீ முதல் 184 மிமீ மழை பதிவாகியுள்ளது.


ஜூலை 1 முதல் 14 வரை (மாலை 5.30 மணி வரை) மும்பையில் 812.5 மிமீ மழை பதிவாகியுள்ளது, இது மாதத்தின் சராசரி மழையின் 96.6 சதவீதமாகும் (840.7 மிமீ). இத்தரவை, IMD, ஒரு செய்திக்குறிப்பில் வெளியிட்டது.


இதற்கிடையில், தொடர்ச்சியான மழை காரணமாக தாழ்வான பகுதிகளான ஹிந்த்மாதா, சியோன், காந்தி சந்தை மற்றும் தாதர் டி.டி, வடாலாவில் உள்ள ஷக்கர் பஞ்சாயத்து சௌக், தாராவி, வடாலா தீயணைப்பு நிலையம், பரேல், செம்பூர் மற்றும் குர்லா, அந்தேரி சுரங்கப்பாதை ஆகிய பகுதிகளில் நீர் தேங்கியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.