‘பழிக்கு பழி;’: நாய்கள் மீது போர் தொடுத்துள்ள குரங்குகள்; சுமார் 250 நாய்கள் பலி
குரங்கு குட்டி ஒன்றை நாய் கொன்றதற்கு பழி வாங்கும் விதமாக, குரங்குகள் கண்ணில் படும் நாய் குட்டிகளை எல்லாம், கொன்று குவித்து வருகிறது
பொதுவாக அதிகமாக குறும்பு செய்யும் சிறுவர்களை பார்த்தாக குரங்கு சேட்டை செய்யாதீர்கள் என கூறும் வழக்கம் உள்ளது. ஆனால், குரங்குகளுக்கு பழி வாங்கும் எண்ணமும் உண்டு என்பதை முன்னதாக நடந்த பல சம்பவங்கள் நிரூபித்துள்ளன. அந்த வகையில், குரங்கு குட்டியை ஒன்று நாய் கொன்றதற்கு, நாய் இனத்தின் மீதே ஒரு போரை தொடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள மஜல்கானில் குரங்குகளின் கூட்டம் நாய் மீது பயங்கர போர் ஒன்றை தொடுத்துள்ளது. குரங்கு குட்டி ஒன்றை நாய் கொன்றதற்கு பழி வாங்கும் விதமாக, குரங்குகள் (Monkey) கண்ணில் படும் நாய் குட்டிகளை எல்லாம், உயரமான கட்டிடங்கள் மற்றும் மரங்களின் உச்சியில் இருந்து தூக்கி எறிந்து தொடர்ந்து கொன்று வருகின்றன. இதுவரை சுமார் 250 குட்டிகளை, குரங்குகள் கொன்றுவிட்டதாகவும், தற்போது கிராம மக்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்துவதால் அங்கே உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மஜல்கானில் அமைந்துள்ள குரங்குகள், சில நாய்கள் ஒரு குரங்கு குட்டியை கொன்றதைத் தொடர்ந்து தனது வெறித்தனத்தை காட்டத் தொடங்கின. குரங்குகள் நாய் வருவதைக் கண்டாலே, அவற்றைப் பிடித்து நல்ல உயரத்தில் இருந்து பூமியை நோக்கி வீசு வருகின்றன.
ALSO READ | காத்திருந்த புறா, கிஸ் கொடுத்த பூனை: பூரிக்கும் நெட்டிசன்கள், வைரலான வீடியோ
பக்கத்து கிராமமான லாவூலிலும் குரங்குகள் நாய்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட முழுவதுமாக ஒழித்துவிட்டன. கிராமத்தில் நாய்கள் அனைத்தும் கொல்லப்பட்டதை அடுத்து, குரங்குகளை பிடிக்க வனத்துறை அதிகாரிகளை அப்பகுதி மக்கள் தொடர்பு கொண்டனர். ஆனால் அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன.
இப்போது, லாவூலில் உள்ள கிராமவாசிகள் மீதும் குரங்குகள் தாக்கி வருகின்றன. வனத்துறையினரால் குரங்குகளை பிடிக்க முடியாததால், கிராம மக்கள் தாங்களாகவே நாய்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தற்போது அப்பகுதியில் குறைந்த அளவு நாய்களே எஞ்சியிருப்பதாகவும், ஒரு மாதமாகியும் குரங்குகள் அட்டகாசம் ஓயவில்லை எனவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது குரங்குகள் சிறு குழந்தைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்துவதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
ALSO READ | Viral Video: ‘என் ஆளை விடுங்க’; கோழிக்காக சேவல் போட்ட சண்டை வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR