காத்திருந்த புறா, கிஸ் கொடுத்த பூனை: பூரிக்கும் நெட்டிசன்கள், வைரலான வீடியோ

பூனை மெதுவாக வருவதைப் பார்த்தால், புறாவை தாக்க வருவதைப் போல தெரிகிறது. ஆனால், அப்படி எண்ணும் நபர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 18, 2021, 02:37 PM IST
காத்திருந்த புறா, கிஸ் கொடுத்த பூனை: பூரிக்கும் நெட்டிசன்கள், வைரலான வீடியோ  title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.  சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பூனைகள் எலிகளையும் புறாக்களையும் வேட்டையாடுவதை நாம் பார்த்திருக்கிறோம். பதுங்கி இருந்து இரையைக் கண்டதும் பாய்ந்துபோய் அந்த இரையை பூனைகள் பிடிப்பதையும் நாம் பார்த்திருக்கிறொம். ஆனால், தற்போது ஒரு மாறுபட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. 

இந்த வீடியோவை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. இந்த வீடியோவை இணையவாசிகள் விரும்பி பார்த்து வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள். 

ALSO READ | வால்பாறையில் ஆட்டை வேட்டையாடும் சிறுத்தை புலி Video Viral 

அப்படி என்னதான் உள்ளது இந்த வீடியோவில்?

இந்த வீடியோவில் ஒரு வீட்டின் கூரையில், ஒரு வெள்ளைப் புறா அமர்ந்திருப்பதைக் காண முடிகின்றது. அங்கு ஒரு பூனை வருகிறது. அது மெதுவாக வருவதைப் பார்த்தால், புறாவை தாக்க வருவதைப் போல தெரிகிறது. ஆனால், அப்படி எண்ணும் நபர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. 

புறாவை நோக்கி மெதுவாக செல்லும் பூனை, அதற்கு முத்தமிடுகிறது. இதை எதிர்பார்த்தது போல, புறாவும் பூனை வருவதைப் பார்த்தும் பறந்துபோகாமல் அங்கேயே இருக்கிறது. 

புறாவுக்கு முத்தமிட்ட பூனை, பின்னர் சாதாரணமாக பின்னால் செல்கிறது. இந்த முழு வீடியோவும் பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாக உள்ளது. 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சண்டையை எதிர்பார்த்த இணையவாசிகள், இந்த வீடியோவில் காணப்படும் காட்சியால் ஆச்சரியம் அடைகிறார்கள். 

அந்த கியூட்டான வீடியோவை இங்கே காணலாம்:

நெட்டிசன்களை ஏமாற்றிய பூனை 
பூனை மற்றும் புறாவின் இந்த வீடியோ nature27_12 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவைக் கண்டு அதிசயிக்கும் நெட்டிசன்கள் (Netizens) இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். பூனை நம்மை ஏமாற்றி விட்டதே என பலரும் கூறி வருகிறார்கள். நாம் குரோதம் இருக்கும் என நினைக்கும் இடத்தில் காதல் இருக்கிறது, விரோதம் இருக்கும் என நினைக்கும் இடத்தில் விருப்பம் இருக்கிறது என இணைய வாசிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் (Social Media) இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

ALSO READ | பட்டையைக் கிளப்பும் பாட்டியின் டான்ஸ், புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்: வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News