கோவா சிறையில், வெளியே குப்பைகளை கொட்ட போன கைதி ஒருவர் தப்பித்து விட்டார். அவரை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போதைப்பொருள் பொருள்கள் சட்டத்தின் கீழ், ஒரு வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹேம்ராஜ் பரத்வாஜை கண்டுபிடிப்பதற்காக மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.


சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியே குப்பைகளை கொட்டும் பணி அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வடக்கு கோவாவில் உள்ள சிறைச்சாலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த நபர்,  செவ்வாய்க்கிழமை குப்பை போட போகும் போது, சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்து தப்பினார்.


அவர் தப்பித்த 20 நிமிடங்களுக்குள் எல்லைகளை உடனே சீல் வைக்குமாறு காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்ப்பார்ப்பதாக சிறைச்சாலைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் குருதாஸ் பிலார்ங்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.


சிறை காவலர்கள் பரத்வாஜ்-ற்கு சிறை வளாகத்திற்கு வெளியே குப்பைகளை கொட்டு பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


சிறை அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்தார்களா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.


சிறைச்சாலையில் சுமார் 500 கைதிகள் உள்ளனர், ஆனால், கடந்த சில நாட்களில்,  12க்கும் அதிகமான கைதிகளுக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


ALSO READ | வாரணாசியின் “டோம் ராஜா” மரணம்... பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி இரங்கல்..!!!