இந்த ஆண்டின் கடைசி மன் கி பாத்; பிரதமர் மோடி என்ன கூறினார்?
மாதாந்திரம் வானொலி மூலமாக மக்களிடையே, பிரதமர் மோடி `மன் கி பாத்` நிகழ்ச்சியில் உரையாற்றுவது வழக்கம்.
மாதாந்திரம் வானொலி மூலமாக மக்களிடையே, பிரதமர் மோடி "மன் கி பாத்" நிகழ்ச்சியில் உரையாற்றுவது வழக்கம்.
அந்த வகையில் 2017 வருடத்தின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி வானொலி மூலமாக மக்களிடையே உரையாற்றினார்.
இன்று அவர் உரையாற்றுகையில் கூறியதாவது:-
> மன் கி பாத் நிகழ்ச்சி எனக்கு பெரிதும் உதவியது. இதன் மூலம் மக்களின் எண்ணங்கள் எனக்கு கிடைத்தன. அவர்களுடன் என்னை தொடர்பில் வைத்தது.
> உலகத்திற்காக இயேசுநாதர் சேவை செய்தார். இந்தியாவின் கலாசாரமாக சேவை உள்ளது. புதிய இந்தியாவுக்காக இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
> வறுமை, சாதி, மதம், தீவிரவாதம், ஊழல் இவையிலிருந்து விடுபட்ட புது இந்தியா உருவாக்க வேண்டும்.
> 21-ம் நூற்றாண்டில் பிறந்த இளைஞர்கள், 2018 ஜூன் 1-ம் தேதியில் வாக்காளர்களாக தகுதி பெற்றவர்கள். புதிய வாக்காளர்களை ஜனநாயகம் வரவேற்கிறது.
> ஓட்டின் சக்தியை இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஓட்டு போடுவது ஜனநாயகத்தில் பெரிய சக்தியாக உள்ளது.
> நகர்ப்புறங்களில் சுத்தம் குறித்து 2018 ஜனவரி முதல் மார்ச் வரை ஆய்வு செய்யப்படும்.
> 2018-ம் ஆண்டின் குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வரும் ஆசியான் நாட்டு தலைவர்களை இந்தியா வரவேற்கிறது. குடியரசு தின விழாவில் நிறைய தலைவர்கள் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.