மனிதனின் அஜாக்கிரதைகள், வாயில்லா ஜீவன்களுக்கு எமனாக போய் விடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படிப்பட்ட சம்பவம் தான் மத்திய பிரதேசத்தில் (Madya Pradesh) ஏற்பட்டுள்ளது. 


தண்ணீர் என தவறாக நினைத்து, மாடுகள் மதுவை அருந்தியதால், 5 பசுக்கள் இறந்தன. மாடுகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


அதிகப்படியான குடிப்பழக்கம் காரணமாக மனிதர்கள் இறப்பது பொதுவாகக் காணப்படும் விஷயமாகும். ஆனால் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் மத்திய பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் அம்பலமாகியுள்ளது. டாடியா மாவட்டத்தில், ஐந்து மாடுகள் மது அருந்தியதால் இறந்தன. பல மாடுகள் போதையில் இருந்தன. இந்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இந்த சம்பவம் டாடியா மாவட்டத்தில் உள்ள இந்தர்கர் நகரில் ஏற்பட்டது. இங்கு சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் வேலை அதிக அளவில் நடப்பதாக கூறப்படுகிறது. சட்டவிரோதமாக கள்ள சாராயம் தயாரிப்பவர்கள் சாலையில் மதுபானங்களை குழிக்குள் வைத்து பாதுகாக்கும் பழக்கம் உள்ளது.  அங்கே சுற்றி திரியும் பசுக்கள் இந்த மதுவை குடித்தன. இதற்குப் பிறகு, பல மாடுகளின் நிலை மோசமடைந்தன. சில மாடுகள் போதையில் அங்கும் இங்கும் ஓடின.


சாராயம் அருந்தியதால் ஐந்து மாடுகள் இறந்தன. குடிபோதையில் இருந்த பல மாடுகள், மக்களைக் துரத்திக் கொண்டு ஓடத் தொடங்கின. இதனால் பலர் காயமடைந்தனர். குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. பசுக்கள் இறந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் (Congress) மற்றும் பாஜக (BJP) தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இது தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.


மனிதர்களாகிய நாம் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதையே இது காட்டுகிறது.


ALSO READ | கோபம் என்பது அவ்வளவு பெரிய குற்றமா?.. சத்குரு கூறுவது என்ன..!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR