புவனேஸ்வர்:  விதி வலியது என்பார்கள்... அல்லது இறைவன் போட்ட கணக்கு ஒரு போதும் தப்பாது என்பார்கள்.. இதை எல்லாம் உறுதிபடுத்தும் வகையில், கோராமாண்டல் ரயில் விபத்தில் அதிர்ஷ்டவசமாக தந்தை - மகள்  உயிர் தப்பியதை கூறலாம். வெள்ளிக்கிழமை கோரமண்டல் ரயிலில் பயணித்த ஒரு தந்தை மற்றும் அவரது எட்டு வயது மகள் ஜன்னல் சீட்டு வேண்டும் என மிகவும் அடம் பிடித்ததை அடுத்து மிகவும்  தனது சீட்டை மாற்றிக் கொண்டாதால் உயிர் தப்பியுள்ளனர். உண்மையில், அதிர்ஷ்டவசமாக, ரயிலில் பயணித்த MK டெப் மற்றும் அவரது எட்டு வயது மகள் ஸ்வாதி வெள்ளிக்கிழமை மாலை கோரமண்டல் எக்ஸ்பிரஸில் தங்கள் இருக்கைகளை மாற்றிக்கொண்டனர். இதன் காரணமாக கடைசி நேரத்தில் மரணத்தை அவரால் வெல்ல முடிந்தது. ஏனெனில் அவரது பயணிக்க வேண்டிய பயணச்சீட்டு இருந்த பெட்டி மோசமான விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மையில், தந்தை-மகள் இருவரும் காரக்பூரிலிருந்து ரயிலில் ஏறினர் மற்றும் சனிக்கிழமையன்று டாக்டருடன் சந்திப்பு இருந்ததால் கட்டாக்கில் இறங்க வேண்டியிருந்தது. மூன்றாவது ஏசி கோச்சில் பயணிக்க டிக்கெட் வைத்திருந்தாலும், குழந்தை சாதாரண பெட்டியில் ஜன்னல் அருகே உட்கார வேண்டும் எனக் கோரி அடம் பிடிக்க தொடங்கியது. காரக்பூரில் உள்ள அரசு ஊழியர் டெப், தங்களிடம் ஜன்னல் இருக்கை டிக்கெட்டுகள் இல்லை என்பதால், டிக்கெட் பரிசோதகரை கேட்டோம். இது குறித்து அவர் முடிந்தால், மற்ற பயணிகளுடன் தங்கள் இருக்கைகளை மாற்றிக் கொள்ளுமாறு பரிந்துரைத்தார். இதை அடுத்து நாங்கள் மற்றொரு பெட்டிக்கு சென்று அங்கு ஜன்னக் சீட்டில் அமர்ந்திருந்த இரண்டு பேரிடம் கேட்டோம், அவர்கள் ஒப்புக்கொண்டனர். எங்கள் இருக்கையில் இருந்து மூன்று பெட்டிகள் தூரத்தில் இருந்த அவரது பெட்டியில் நாங்கள் அமர்ந்து கொண்டோம். ​​அவர் நாங்கள் முன் பதிவு செய்திருந்த பெட்டிக்கு சென்றதால்க டெப் கூறினார்.


விபத்தில் 288 பேர் உயிரிழப்பு


இருக்கைகள் மாற்றப்பட்ட சிறிது நேரத்தில், ரயில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, தந்தை - மகள் இருவரும் பயணம் செய்த பெட்டிக்கு அதிக சேதம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் அவர்களின் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்ட மற்ற பெட்டிகளுக்கு சேதம் ஏற்பட்டது. அது பல பகுதிகளாகப் பிரிந்து அதில் பலர் இறந்தனர்.


மேலும் படிக்க | 20 நிமிடங்களுக்குள் மூன்று ரயில்கள் மோதி விபத்து!


'அதிசயத்தை நிகழ்த்திய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி'


எங்களுடன் இருக்கைகளை மாற்ற ஒப்புக்கொண்ட இரண்டு பயணிகளின் நிலை குறித்து எங்களுக்குத் தெரியாது என்று டெப் கூறினார். அவரது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மனமார பிரார்த்திக்கிறோம். அதே நேரத்தில், இந்த அதிசயத்திற்காக நாங்கள் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எங்கள்  பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருந்தனர்.


கட்டாக் நோக்கி பயணம்


சிறிய காயம் அடைந்த நபரும் அவரது மகளும் உள்ளூர் மக்களின் உதவியுடன் சனிக்கிழமை காலை கட்டாக்கை அடைய முடிந்தது என்று டெப் கூறினார். சிறுமியின் இடது கையில் ஒரு பெரியப் புண்ணிற்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அணுக திட்டமிட்டிருண்ட்தார் அந்த தந்தை. குழந்தை நல மருத்துவர் விக்ரம் சமல் கூறுகையில், தந்தை-மகள் அதிசயமாக தப்பியதை அறிந்ததும், எனது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லாமல் தவித்தேன். ரயில் மோதியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வில், பெட்டிக்குள் விழுந்ததில் தந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது.


இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்துக்கள்


இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்தாக ஒடிஷா ரயில் விபத்து உள்ளது. 1981ஆம் ஆண்டு ஏற்பட்ட பீகார் ரயில் விபத்தில் 800 பேர் இறந்தனர். அதேபோல் 1956ம் ஆண்டு அரியலூர் ரயில் விபத்தில் 250 பேர் இறந்தனர். அதற்கு இணையான விபத்தாக ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து கருதப்படுகிறது.


மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அடையாளம் காண்பது? ரயில்வே தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ